சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாமூலில் மட்டும் மனசு வைக்கும் பெண் அதிகாரி!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
''தொகுதி பக்கம் வந்துடக் கூடாதுன்னு கடவுளை வேண்டிட்டு இருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யார் மேல மக்கள் இவ்வளவு வெறுப்புல இருக்கா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தி.மு.க., ஆட்சியில, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரா, 'பவர்புல்'லா வலம் வந்தவர், வெள்ளக்கோவில் சாமிநாதன்... ''இவரது தொகுதியான வெள்ளக்கோவில், தொகுதி சீரமைப்புல காணாம
டீ கடை பெஞ்ச்

''தொகுதி பக்கம் வந்துடக் கூடாதுன்னு கடவுளை வேண்டிட்டு இருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யார் மேல மக்கள் இவ்வளவு வெறுப்புல இருக்கா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தி.மு.க., ஆட்சியில, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரா, 'பவர்புல்'லா வலம் வந்தவர், வெள்ளக்கோவில் சாமிநாதன்...

''இவரது தொகுதியான வெள்ளக்கோவில், தொகுதி சீரமைப்புல காணாம போயிட்டு... இதனால, 2016 தேர்தல்ல, புதுசா உருவான, மடத்துக்குளம் தொகுதியில போட்டியிட்டாரு வே...

''உள்ளூர் கட்சியினரை நம்பாம, சொந்தக்காரங்களை நம்பி, தேர்தல் வேலைகளை ஒப்படைச்சு தோத்துட்டாரு... வர்ற தேர்தல்ல மறுபடியும், உடுமலை, மடத்துக்குளம் அல்லது காங்கேயம் தொகுதியில போட்டியிட ஆர்வமா இருக்காரு...

''நம்ம தொகுதி பக்கம் அவர் வராம இருக்கணும்னு, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில, 'சீட்' கனவுல இருக்கிற தி.மு.க.,வினர், தங்களுக்கு வேண்டிய சாமிகளை கும்பிட்டுட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''மஞ்சள் துண்டு போட்டுண்டு, முதல்வர் கனவு காண ஆரம்பிச்சுட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

''கருணாநிதிக்கு பிறகு, யாரு வே மஞ்சள் துண்டு போட்டிருக்கா...'' என, ஆர்வமாக கேட்டார், அண்ணாச்சி.

''தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சமீபகாலமா, மஞ்சள் துண்டு போட்டுக்க ஆரம்பிச்சுட்டார்... அவரை பார்க்கற கட்சிக்காராள்லாம், 'என்ன தலைவரே, திடீர்னு மஞ்சள் துண்டுக்கு மாறிட்டேள்'னு கேக்கறா ஓய்....

''அதுக்கு, 'கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டுண்டப்பறமா தான் முதல்வரானார்... நான் அணியப்டாதா'ன்னு சிரிச்சுண்டே கேக்கறார்...

''அதே நேரம், டில்லிக்கு போனா, அங்க இருக்கற பா.ஜ., தலைவர்களை நேர்ல பார்த்து, சிரிக்க சிரிக்க பேசறார்... சென்னையில கால் வச்சதும், பா.ஜ.,வை திட்டி தீர்க்கறார்... 'இவரோட அரசியல் கணக்கையே புரிஞ்சுக்க முடியலை'ன்னு, காங்கிரசார் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்டத்துல, 'குட்கா' பொருட்கள் சர்வ சாதாரணமா கிடைக்குது பா...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''அது மட்டும் இல்லை... காலாவதியான, தரமில்லாத, சுகாதாரம் இல்லாத உணவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுன்னு பல விதிமீறல் நடக்குது பா...

''இதை எல்லாம் கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை பெண் அதிகாரி, மாமூல்ல மட்டுமே குறியா இருக்காங்க...''இவங்களிடம் ஏதாவது புகார் வந்தா, புகார்ல குறிப்பிட்ட நிறுவனத்தை பார்த்து, எக்ஸ்ட்ரா மாமூல் வாங்கிட்டு, நடவடிக்கை எடுக்கிறது இல்லை பா...

''இவங்க கட்டுப்பாட்டுல வர்ற கடை, கம்பெனி, நிறுவனங்கள்ல, 500 ரூபாய் துவங்கி, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும், மாசா மாசம் மாமூல் வாங்கிடுறாங்க... ''இவங்களுக்கு பணம் வாங்கி தரவே, சில புரோக்கர்களும் இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''நாயரே... சீக்கிரம் டீயை போடும்... சவுமியாசுந்தரி ஆத்து விசேஷத்துக்கு போகணும்...'' என, குப்பண்ணா அவசரப்படுத்த, நாயர், பாய்லரை நோக்கி நகர்ந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
23-நவ-202021:07:34 IST Report Abuse
K.n. Dhasarathan Food protection official is very very Important post, if they fail to work properly the punishment should be severe, as the MATTER falls on people's life. If BRIBE comes to picture, HANG the official and ban his Assets & Properties. This is not new, even the Pakistan, the Military country, takes bold steps. But here our Judicial tem & judges not correct, not giving Hard punishment, except few.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202011:11:51 IST Report Abuse
D.Ambujavalli இப்படி விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து இவ்வாறே இருக்க வேண்டும், ஒவ்வொரு புகாருக்கும் கணிசமாக 'வருமானம்' வர வேண்டும் என்பதற்காகவே கூட தங்கள் ஆட்களையே விட்டுப் புகார் தட்டிவிடச் செய்தாலும் வியப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X