பொது செய்தி

தமிழ்நாடு

சுறுசுறுப்பு! வாக்காளர் சேர்க்கையில் அரசியல் கட்சியினர்முதல் முறை ஓட்டளிப்பவர்களை கவர முயற்சி

Added : நவ 23, 2020
Share
Advertisement
சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதால், புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில்அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளனர்.தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு முதல் கட்ட பணிகளை துவக்கியுள்ளது. கடந்த இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் புது வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள்,

சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதால், புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில்அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளனர்.தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு முதல் கட்ட பணிகளை துவக்கியுள்ளது. கடந்த இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் புது வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் ஆகிய இரு பிரதான கட்சிகளும் முழு வீச்சில் களத்தில் இறங்கி பணியாற்றினர். 18 வயது நிரம்பிய, ஓட்டளிக்கும் தகுதி பெற்றவர்களை வீடு தேடிச்சென்று அழைத்து வந்து பெயர் சேர்க்க விண்ணப்பங்களை நிரப்பி தந்து உதவி செய்தனர். முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவைகளை செய்ய உதவி செய்தனர். பா.ஜ.,- காங்., உள்ளிட்ட தேசிய கட்சியினரும், மற்ற கட்சியினரும் இதில் ஆர்வம் காட்டவில்லை.சூலுார் தாலுகாவில், 324 ஒட்டுச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் முகாம் துவங்கியது. முதல் நாள் மட்டும், 3, 204 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பங்களை அளித்திருந்தனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 500 க்கும் மேற்பட்டோர் முகாம் பணியில் ஈடுபட்டனர். அன்னுார் தாலுகாவில் நடந்த வாக்காளர் சேர்க்கை முகாம்களை, தாசில்தார் சந்திரா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் அன்னுார் ஒன்றியத்தில், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய ஆயிரத்து 17 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 594 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதேபோல, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் நடந்த முகாம்களிலும், புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தரப்பட்டனநமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X