பொது செய்தி

தமிழ்நாடு

லைட் இருந்தும் பயனில்லை!

Added : நவ 23, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகரில், இரு இடங்களில், பல லட்சம் ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட ஹைமாஸ் லைட்டுகள், எரிவது இல்லை.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், உயர்கோபுர ஹைமாஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டன. அனைத்து பல்புகளும் எரிந்த போது, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. இதனால் சுற்றுப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட், காரமடை, அன்னுார்,

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகரில், இரு இடங்களில், பல லட்சம் ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட ஹைமாஸ் லைட்டுகள், எரிவது இல்லை.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், உயர்கோபுர ஹைமாஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டன. அனைத்து பல்புகளும் எரிந்த போது, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. இதனால் சுற்றுப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட், காரமடை, அன்னுார், அண்ணாச்சி, ஊட்டி ஆகிய சாலைகளில், 50 மீட்டர் சுற்றளவில் உள்ள தெருவிளக்குகள், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.இந்நிலையில் இந்த ஹைமாஸ் லைட் எரிவதில்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப் பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. பவானி ஆற்று பாலம் அருகே, ஊட்டி, கோத்தகிரி சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள ரவுண்டானாவில், ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டது. இதன் அருகே போலீஸ் சோதனைச் சாவடியும் உள்ளது.இந்த மின் விளக்குகள் எரிந்த போது, சோதனைச் சாவடியில் உள்ள போலீசாருக்கு, வாகனங்களை இரவு நேரத்தில், சோதனை செய்வது எளிதாக இருந்தது. இந்த ஹைமாஸ் லைட்டுகள் தற்போது எரிவதில்லை. இதனால் இரவில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால், போலீசார் வாகனங்களை சோதனை செய்ய முடியாமல், மிகுந்த சிரமப்படுகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் உடனடியாக, எரியாத மின் விளக்குகளை மாற்றியமைத்து, இரு இடங்களில் உள்ள ஹைமாஸ் லைட்டுகளை, எரிவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X