நாடு முழுவதும் ஜே.பி.நட்டா 120 நாள் சுற்றுப்பயணம்; பா.ஜ.,வை பலப்படுத்த வியூகம்

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வை பலப்படுத்த, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ., எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகம் வந்த
BJP, Nadda, nationwide_tour, 120_days, JP Nadda

புதுடில்லி: பா.ஜ.,வை பலப்படுத்த, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ., எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக.,வுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் பா.ஜ., - அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது.


latest tamil news



இந்நிலையில், பா.ஜ., பொதுச்செயலர் அருண்சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், 2024ம் ஆண்டு பார்லி., தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பா.ஜ.,வை பலப்படுத்த, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், டிசம்பர் முதல் வாரம், உத்தரகண்டில் தனது பயணத்தை நட்டா தொடங்குவார் எனவும், தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து அந்தந்த மாநில பா.ஜ., நிர்வாகிகளுடன், நட்டா ஆலோசனை நடத்துவார் எனவும் அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
23-நவ-202015:00:07 IST Report Abuse
Visu Iyer கழகங்கள் இல்லா தமிழகம் கனவாகி போச்சு.. கழகத்துடன் கை நனைத்து விட்டாச்சு.. தாமரை தனியாக நிற்க வேண்டும்.. ஒரு முறை தோற்றாலும் - அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும்.. அவர்களுக்கு புரியாது அல்லது காதில் விழாது..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-நவ-202014:56:58 IST Report Abuse
Visu Iyer இப்படி தான் இதுக்கு முன்னாடி... தமிழ் நாட்டில் தாமரை மலரும்.. என ஒரு இசை முன்பு வந்தது.. இப்போ ஆந்திரா பக்கம் போயிடுச்சு...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-நவ-202014:40:17 IST Report Abuse
Visu Iyer கட்சி ப(ழ)லமா தான் இருக்கு.. பலமா இருக்கிற கட்சியை பலப்படுத்தப் போறாங்களாம்.. இப்படி தான் இவர்கள் திறமை இவர்களை நம்பி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X