பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 23, 2020
Share
Advertisement
நவ., 23, 1992நாகை மாவட்டம், திருச்சிற்றம்பலம் எனும் ஊரில், 1909 அக்., 29ம் தேதி பிறந்தவர், மு.அருணாசலம். கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். 1931-ல், சென்னை, தி.நகரில் குடியேறினார். ரசிகமணி, வையாபுரிப் பிள்ளை ஆகியோரால், தமிழ் மீது பற்று ஏற்பட்டது. சென்னைப் பல்கலையில், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.முக்கூடற்பள்ளு நுாலை, முதன்முதலில் பதிப்பித்தவர் இவர் தான். இதைத் தொடர்ந்து, ஊர்
 இதே நாளில் அன்று

நவ., 23, 1992
நாகை மாவட்டம், திருச்சிற்றம்பலம் எனும் ஊரில், 1909 அக்., 29ம் தேதி பிறந்தவர், மு.அருணாசலம்.

கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். 1931-ல், சென்னை, தி.நகரில் குடியேறினார். ரசிகமணி, வையாபுரிப் பிள்ளை ஆகியோரால், தமிழ் மீது பற்று ஏற்பட்டது. சென்னைப் பல்கலையில், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.முக்கூடற்பள்ளு நுாலை, முதன்முதலில் பதிப்பித்தவர் இவர் தான். இதைத் தொடர்ந்து, ஊர் ஊராக அலைந்து, 150-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை சேகரித்தார்; பல நுால்களைப் பதிப்பித்தார்.

எட்டு நுாற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றை எழுதி, 11 தொகுதிகளாக வெளியிட்டது, இவரது மாபெரும் சாதனை. தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு உட்பட, எண்ணற்ற நுால்கள் எழுதியுள்ளார். 1992 நவ., 23ம் தேதி, தன், 83வது வயதில் இயற்கை எய்தினார்.அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X