உத்தர பிரதேச முதல்வராக நான் பதவி ஏற்பதற்கு முன், இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பசுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. தற்போது, உ.பி.,யில், பசு வதை முகாம்கள் மூடப்பட்டுள்ளதோடு, பசு கடத்தல்களும் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னையில், சவால்களை முழுமையாக வென்றுள்ளோம்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
வரையறை உண்டா?
பா.ஜ.,வை சேர்ந்த பல தலைவர்களின் குடும்பத்தினர், மாற்று மதங்களில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணங்கள் எல்லாம், 'லவ் ஜிகாத்' வரையறைக்குள் வருமா என்பதை, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்.
பூபேஷ் பாஹெல், சத்தீஸ்கர் முதல்வர், காங்கிரஸ்
நிரந்தர தீர்வு!
ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருந்துகள், குறைந்த செலவில், நோய்களை தடுப்பதில், மிக சிறப்பாக செயல்படுகின்றன. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின் ஏற்படும் பல்வேறு உடல் மற்றும் மனநல பிரச்னையில் இருந்து நிரந்தர தீர்வு பெற, ஆயுர்வேதா, யோகா உள்ளிட்ட மருத்துவ முறைகள் சிறந்த பலன்களை அளிக்கின்றன.
ஸ்ரீபாத் நாயக், மத்திய ஆயுஷ் இணை அமைச்சர்,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE