சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எங்கள் குழுவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பலருக்கும் பொழுது போக்காக உள்ள 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை, தன் வியாபார தளமாக மாற்றி, வீட்டில் இருந்தபடியே, மாதம், லட்ச ரூபாய் சம்பாதிக்கும், சென்னையை சேர்ந்த சங்கீதா: படித்தது சார்ட்டர்டு அக்கவுன்டன்சி. திருமணம் ஆனதும், குழந்தை பிறந்தது. குழந்தையை சரியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, தொழிலுக்கு முழுக்கு போட்டேன். குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும்; எப்படி
சொல்கிறார்கள்

பலருக்கும் பொழுது போக்காக உள்ள 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை, தன் வியாபார தளமாக மாற்றி, வீட்டில் இருந்தபடியே, மாதம், லட்ச ரூபாய் சம்பாதிக்கும், சென்னையை சேர்ந்த சங்கீதா:
படித்தது சார்ட்டர்டு அக்கவுன்டன்சி. திருமணம் ஆனதும், குழந்தை பிறந்தது. குழந்தையை சரியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, தொழிலுக்கு முழுக்கு போட்டேன். குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும்; எப்படி கொடுக்க வேண்டும்; எந்த விதமான உணவுகளை வழங்க வேண்டும்; எந்த உடை, எங்கு வாங்கலாம் என்பன போன்ற பல சந்தேகங்கள் எழுந்தன. அதை தோழிகளிடம் கேட்பேன்.

அதை அவர்கள் தொடர்ந்து பகிர, அதற்காக, 'ஸ்மார்ட் மம்மீஸ்' என்ற பேஸ்புக் பக்கத்தை துவக்கி, குழந்தை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொண்டேன். தப்பித் தவறிக் கூட, 'குழந்தைக்கு பிடித்துள்ள சளிக்கு, இந்த மருந்தை கொடுங்கள்; இப்படி கைப்பக்குவம் செய்யுங்கள்' என்பன போன்ற, மருத்துவ குறிப்புகளை கொடுப்பதில்லை.

அதுபோல, ஆண்களையோ, பெண் பெயரில் உள்ள ஆண்களையோ குழுவில் சேர்ப்பதில்லை. எங்கள் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெண் யாராவது பரிந்துரை செய்தால் தான், பெண்களையே சேர்த்துக் கொள்வேன்.இதனால், எங்கள் குழுவில் பகிரப்படும் தகவல்கள் உண்மையானவை, சிறந்தவை என்ற உணர்வு, குழுவில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட்டது. நாளாவட்டத்தில், பெண்கள் தங்களுக்குள் இருக்கும் பிசினஸ் தொடர்பான ஆர்வத்தை பகிர்ந்தனர். அதற்கு, எங்கள் உறுப்பினர் இடையே நல்ல வரவேற்பும் இருந்தது.

அதனால், ஸ்மார்ட் மம்மீஸ் பக்கம் போலவே, 'எஸ்.எம்., பிசினஸ் மேக்னெட்ஸ்' என்ற பிசினஸ் சார்ந்த பேஸ்புக் குழுவை உருவாக்கினேன். அதில், அனைத்து விதமான தொழில் வாய்ப்புகளையும் உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.இந்த குழுவில், 10ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாதம், 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த குழுவில் பரஸ்பரம் பகிரப்படும் தகவல்களால், அதில் உள்ள உறுப்பினர்களின் பொருட்கள் விற்பனையாகின. இதனால், அந்த குழு பிரபலமாகி, ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.

அதன் பிறகும், பெண்கள் மட்டுமே இணைந்த, 'கடைவீதி' என்ற ஆன்லைன் பிசினஸ் தளத்தை உருவாக்கியுள்ளேன். அதில் இணையும் அம்மாக்களுக்கு புகைப்படம் எடுப்பது, அழகுக்கலை அலங்காரம் செய்வது, மார்க்கெட்டிங் செய்வது போன்ற பயிற்சி, தகவல்களை கொடுக்கிறேன். அதற்காக, குறைந்த அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த கொரோனா நேரத்தில், ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டால்களை துவக்கி, ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் பெற்று, என் தொழில், ஜாம் ஜாம் என செல்கிறது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-நவ-202005:58:44 IST Report Abuse
NicoleThomson எல்லாம் தொழில்மயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X