பொது செய்தி

தமிழ்நாடு

வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டோரை சேர்க்கணும்!

Added : நவ 23, 2020
Share
Advertisement
அன்னூர்:வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 24 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் 2 ஆயிரத்து 36 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற்ற வீடுகளுக்கு, கணக்கெடுப்பாளர்கள் கடந்த, நான்கு நாட்களாக சென்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகிவற்றை

அன்னூர்:வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 24 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் 2 ஆயிரத்து 36 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற்ற வீடுகளுக்கு, கணக்கெடுப்பாளர்கள் கடந்த, நான்கு நாட்களாக சென்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகிவற்றை பெற்று, வாரிசுதாரர் பெயர், முகவரி மாற்றம் ஏதும் உள்ளதா, மொபைல் எண், லேண்ட்லைன் எண், வருமானம், வாரிசு உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு படிவத்தை நிரப்பி வருகின்றனர்.செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர்கள் கணக்கெடுக்கும் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'ஓட்டு வீடுகளில் வசிப்போர், கணவனை இழந்தோர், உள்ளிட்ட சில குடும்பங்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அரசு இந்தப் பட்டியலில் புதிதாக தகுதி உள்ள ஏழை, எளிய மக்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X