'ராஜிவ் கொலையாளி விடுதலை கவர்னர் கையில் தான் உள்ளது'

Added : நவ 23, 2020
Share
Advertisement
புதுடில்லி: 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுவிப்பது பற்றி, தமிழக கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை

புதுடில்லி: 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுவிப்பது பற்றி, தமிழக கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2018 செப்., 9ல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, கவர்னர் முடிவு அறிவிக்காத நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, பேரறிவாளன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி, நாகேஷ்வர ராவ் அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், கவர்னர் ஏன் இவ்வளவு கால தாமதப்படுத்துகிறார் 'என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனுவாசன் கூறுகையில், 'இந்த வழக்கு தொடர்பாக, சி,பி,ஐ.,யிடமிருந்து கவர்னர் அறிக்கை கேட்டிருப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது' என்றார்.இது தொடர்பாக, சி.பி.ஐ., விளக்கம் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது பற்றி, கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். இதில், சி.பி.ஐ.,க்கு எந்த பங்கும் இல்லை. ராஜிவ் கொலையில் உள்ள அரசியல் சதி பற்றி விசாரிக்கும், எம்.டி.எம்.ஏ., எனப்படும், பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணையின் விபரங்களை கேட்டு, கவர்னர் அலுவலகத்திலிருந்து, எங்களுக்கு எவ்வித வேண்டுகோளும்வரவில்லை.அந்த விவரங்களை எவருக்கும் தெரிவிக்கக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X