பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ முகாம்: 90 பேருக்கு பரிசோதனை

Added : நவ 23, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே புஜங்கனூரில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், 90 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.காரமடை ரோட்டரி சங்கம், விநாயகா வித்யாலயா, ஐ பவுண்டேஷன், எஸ்.ஜி.கே மருத்துவமனை, சக்தி நர்சிங் ஹோம், செந்தூர் ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவை இணைந்து, புஜங்கனூர் விநாயகா வித்யாலயா பள்ளியில், இலவச மருத்துவ முகாமை நடத்தியது. நிகழ்ச்சிக்கு

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே புஜங்கனூரில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், 90 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.காரமடை ரோட்டரி சங்கம், விநாயகா வித்யாலயா, ஐ பவுண்டேஷன், எஸ்.ஜி.கே மருத்துவமனை, சக்தி நர்சிங் ஹோம், செந்தூர் ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவை இணைந்து, புஜங்கனூர் விநாயகா வித்யாலயா பள்ளியில், இலவச மருத்துவ முகாமை நடத்தியது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சிவ சதீஸ்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் ஞானசேகரன் முகாமைத் துவக்கி வைத்தார். திட்டத் தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார்.முகாமில் பொது மருத்துவம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், நுரையீரல் பரிசோதனை, கண் பரிசோதனை, இ.சி.ஜி. ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர்கள் விஜயகிரி, தமிழ்ச்செல்வி, கார்த்திகேயன், கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் ஆகியோர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு, பரிசோதனை செய்தனர். அப்பகுதியிலுள்ள மலைவாழ் கிராம மக்கள் உட்பட, 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X