பெங்களூரு, ஐ.எம்.ஏ., நிதி மோசடி வழக்கு 'மாஜி' அமைச்சர் பெய்க் சிறையில் அடைப்பு

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு, ஐ.எம்.ஏ., நிதி மோசடி தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.பெங்களூரு, சிவாஜி நகரை தலைமையிடமாக வைத்து, ஐ.எம்.ஏ., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு

பெங்களூரு: பெங்களூரு, ஐ.எம்.ஏ., நிதி மோசடி தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு, சிவாஜி நகரை தலைமையிடமாக வைத்து, ஐ.எம்.ஏ., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தது.ஆனால், நிதியையும், அதற்கான வட்டியையும் கொடுக்காமல் மோசடி செய்தது.இந்த மோசடி தொடர்பாக, ஐ.எம்.ஏ., நிதி நிறுவன உரிமையாளர் மன்சூர் கானை, எஸ்.ஐ.டி., என்ற சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்திருந்தனர்.

பின், பாதிக்கப்பட்டோரின் கோரிக்கையை ஏற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது, சிவாஜி நகர் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வாக இருந்த ரோஷன் பெய்க், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஹேமந்த் நிம்பால்கர், அஜய் ஹிலோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயசங்கர் உட்பட பலர், மோசடிக்கு துணை போனதாக தெரியவந்தது.இதையடுத்து, அனைவரும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, ரோஷன் பெய்க், 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், விலை உயர்ந்த கார்கள், பரிசு பொருட்கள் பெற்றதாக, ஐ.எம்.ஏ., உரிமையாளர் மன்சூர் கான் தெரிவித்திருந்தார்.இம்மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. நேற்று காலை, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரோஷன் பெய்க்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்திருந்தனர்.அதன்படி, பெங்களூரு கங்கா நகரிலுள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். ஏழு மணி நேர விசாரணைக்கு பின், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், சி.பி.ஐ., அலுவலகத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டார்.பின், பெங்களூரு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, நேற்றிரவு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவர், சித்தராமையா ஆட்சி காலத்தில், நகர அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்தவர். இவரது கைதால், ஐ.எம்.ஏ., நிதி மோசடிக்கு துணை போன, மற்றவர்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
23-நவ-202010:52:57 IST Report Abuse
Nellai tamilan அமைதி மார்கத்தை சேர்ந்தவர்கள் வட்டி வரும் தொழிலில் முதலீடு செய்யக்கூடாதுனு சொல்லி மொத்த முதலுக்கே மோசம் போன கதை தான் இந்த மோசடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X