பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிரான விசாரணை; மற்றொரு பக்கம், அவருக்கு ஆதரவாக போராட்டம். 'சுரப்பா நேர்மையானவர், ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் பழி வாங்கப்படுகிறார்' என்கின்றனர்.இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிரான விசாரணை; மற்றொரு பக்கம், அவருக்கு ஆதரவாக போராட்டம். 'சுரப்பா நேர்மையானவர், ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் பழி வாங்கப்படுகிறார்' என்கின்றனர்.



latest tamil news



இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர். மிகவும் நேர்மையானவர் என அனைவராலும் கூறப்பட்ட இந்த தலைமை நீதிபதி, அரசின் எந்த பதவியையும், தன் பதவி ஓய்விற்கு பின் ஏற்கவில்லை.

'பல்கலை துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக உங்களை நியமிக்க உள்ளோம். நீங்கள் இந்த குழுவில் இருந்தால், அதற்கு ஒரு மரியாதையும், பெருமையும் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் நேர்மையானவராக இருப்பார்' என, நீதிபதியிடம் கவர்னர் கூறினாராம். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டாராம் அந்த நீதிபதி.


latest tamil news



சுரப்பா விவகாரம், தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்த தலைமை நீதிபதி சமீபத்தில் கூறுகையில், 'நான் அன்று எடுத்த முடிவு எவ்வளவு சரி என இப்போது புரிகிறது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஏகப்பட்ட அரசியல் உள்ளது. படிப்பு விவகாரத்தில் ஊழல் புகுந்தால் மாணவர்களின் கதி என்னவாகும்' என, வருத்தப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
23-நவ-202017:27:59 IST Report Abuse
Naagarazan Ramaswamy நீதியை நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து அதை நழுவ விட்டார் என்றே நான் கருதவேண்டியுள்ளது. ஏன் யாருக்காக பயப்படவேண்டும் அவர்?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
23-நவ-202016:47:37 IST Report Abuse
konanki சூரப்பா இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் பெங்களூர் தலைவராக இருந்தார். அந்த நிறுவனத்தில் கேண்டினில் வேலை பார்க்க கூட தகுதியில்லாத நடிகர் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணுது. காரணம் குடும்ப அடிமைகள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
23-நவ-202016:42:53 IST Report Abuse
konanki சசிகலா முன்பு 5 தமிழக துணை வேந்தர் கள் கைகட்டி நின்ற கோலத்தில் உள்ள கட்சி கண்டோம். அது மாதிரியான திராவிஷ ,ஊழல் பார்ட்டிகள், ,திறமை இல்லாத, நேர்மை அற்ற டுபாக்கூர் துணை வேந்தர்களை பார்த்தே பழகிய திராவிஷங்களுக்கு சிங்கம் போன்ற சூரப்பாவை கண்டால் எரியிது. என்ன செய்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X