பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தறிவில்லாதோருக்கு கல்வி போதனை: 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் பயிற்சி

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், படிக்க, எழுத தெரியாதவர்களுக்கு, 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தில் கல்வி போதிக்கும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககம் சார்பில், புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டத்தில் பயிற்சி அளிக்க உள்ள பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தன்னார்வலர்களுக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், படிக்க, எழுத தெரியாதவர்களுக்கு, 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தில் கல்வி போதிக்கும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககம் சார்பில், புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டத்தில் பயிற்சி அளிக்க உள்ள பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.பி.கே.டி., பள்ளியில் நடந்த முகாமில், வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைச்செல்வி, சுகந்திலட்சுமி, தலைமையாசிரியர் சாமுவேல் செல்வக்குமார் பயிற்சி அளித்தனர். அதில், 56 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.பயிற்சியாளர்கள் கூறியதாவது:ஒவ்வொரு பகுதியிலும், 15வயதுக்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோரின் விபரங்களை கண்டறிய வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையங்களாக செயல்படும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.ஒவ்வொரு கற்றல் மையமும் குறைந்த பட்சம், 20 மற்றும் அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ஆண்டில் மூன்று முறை இறுதி மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.எண்ணறிவு, எழுத்தறிவு அடிப்படையில், தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணைய வழிச் சேவை பண பரிமாற்றம், துாய்மை பாரதம், உள்ளிட்டவை குறித்தும் கல்லாதோருக்கு, தன்னார்வலர்கள் கற்பிக்க வேண்டும்.கற்க வருபவர்கள் வயதானோர்கள் என்பதால் அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்தும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202016:32:10 IST Report Abuse
Ram Pollachi வந்து போகிறவர்களுக்கு காப்பி தண்ணீ, கடி எல்லாம் உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X