டவுன் பஸ்கள் இயக்காததால் சரக்கு ஆட்டோவில் பயணம்

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கிராமப்பகுதிகளுக்கு டவுன் பஸ் இயக்கப்படாததால், மக்கள் வேறு வழியின்றி சரக்கு ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கின் போது ரத்து செய்யப்பட்ட பஸ் போக்குவரத்து, மீண்டும் துவங்கப்பட்ட போது, பொள்ளாச்சி பகுதியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால், பல்வேறு கிராமங்கள் பஸ் வசதியின்றி உள்ளன. வசதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கிராமப்பகுதிகளுக்கு டவுன் பஸ் இயக்கப்படாததால், மக்கள் வேறு வழியின்றி சரக்கு ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கின் போது ரத்து செய்யப்பட்ட பஸ் போக்குவரத்து, மீண்டும் துவங்கப்பட்ட போது, பொள்ளாச்சி பகுதியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால், பல்வேறு கிராமங்கள் பஸ் வசதியின்றி உள்ளன. வசதி வாய்ப்புள்ளவர்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும் நிலையில், ஏழை, எளிய மக்கள் அவசர சூழலில் போக்குவரத்து வசதியின்றி, உள்ளூர் சரக்கு ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். பெரும்பாலும், முதியவர்கள், பெண்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.சரக்கு ஆட்டோக்களில் பயணிகளை அழைத்து செல்வது விதிமீறல் என்றாலும், வேறு வழியில்லாததால், ஆட்டோ ஓட்டுனர்கள் இதைச் செய்கின்றனர். மக்களும், பஸ் வசதி இல்லாததால், வசதிக்குறைவையும், பாதுகாப்பு குறைபாட்டையும் பொருட்படுத்தாமல், சரக்கு ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.இயல்பு நிலை முழுமையாக திரும்பியுள்ள நிலையில், 'பயணிகள் கூட்டம் இல்லை' என்று கூறிக்கொண்டிருக்காமல், அனைத்து வழித்தடங்களிலும் டவுன் பஸ்களை முழுமையாக இயக்க பொள்ளாச்சி கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202016:28:57 IST Report Abuse
Ram Pollachi நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனங்களே கொரோனா மேல் பாரத்தைப் போட்டு பாதி சம்பளத்தை தருகிறார்கள். அரசு போ.துறை ஊழியர்களுக்கு சூழற்ச்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் வாய்ப்பு வழங்கப்படுகிறது அவ்வளவு நஷ்டம். இது தெரிந்தும் முழுவதையும் இயக்க சொன்னால் என்ன ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும்! அதுவரை உயிரை கையில் பிடிச்சுக்கோ!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X