பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் ரேஷன் கடை: கிராம மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கணக்கம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையால், நடமாடும் ரேஷன்கடை துவக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு கிராமம் கணக்கம்பட்டி. கிராமத்தில், 100க்கும் குறைவான ரேஷன்கார்டுகள் உள்ளதால், அருகில் உள்ள கள்ளிப்பட்டிக்கு சென்று மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், மக்களுக்கு நேர விரயம் ஏற்பட்டதோடு,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கணக்கம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையால், நடமாடும் ரேஷன்கடை துவக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு கிராமம் கணக்கம்பட்டி. கிராமத்தில், 100க்கும் குறைவான ரேஷன்கார்டுகள் உள்ளதால், அருகில் உள்ள கள்ளிப்பட்டிக்கு சென்று மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், மக்களுக்கு நேர விரயம் ஏற்பட்டதோடு, ஒரு நாள் வேலையும் இழந்து தவித்தனர். இதுபற்றி, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, தங்கள் கிராமத்துக்கு நடமாடும் ரேஷன்கடை ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர்.இதன்விளைவாக, கணக்கம்பட்டி கிராமத்துக்கு தற்போது, நடமாடும் ரேஷன் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கடை துவக்கவிழா கணக்கம்பட்டியில் நடந்தது. இக்கடை வாரம் ஒருமுறை செயல்படும். தொடர்ந்து, கணக்கம்பட்டி மற்றும் கள்ளிப்பட்டி கிராம மக்களிடம் இருந்து, 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல், பி.டி.ஓ., விவேகானந்தன், ஊராட்சி தலைவர் திருவேங்கடம் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X