பொது செய்தி

தமிழ்நாடு

மலர் சாகுபடி பரப்பு அதிகரிக்க மானியம்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:மலர் சாகுபடியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும், ஊக்குவிப்பு திட்டங்களையும், தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மலர் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. சீசன் சமயங்களில்,

உடுமலை:மலர் சாகுபடியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும், ஊக்குவிப்பு திட்டங்களையும், தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மலர் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. சீசன் சமயங்களில், கோழிக்கொண்டை, செவ்வந்தி உட்பட மலர்கள் மட்டும், சாகுபடி செய்யப்படுகிறது.புங்கமுத்துார் உட்பட கிராமங்களில், மல்லிகை பூ சாகுபடியில் சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை பகுதி மலர்களுக்கான தேவை பிற மாவட்ட உற்பத்தியை அடிப்படையாக கொண்டே உள்ளது. 'பொக்கே' ரோஜா மலர்கள் பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்தும், பன்னீர் ரோஜாக்கள் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. மல்லிகை, முல்லை உட்பட மலர்கள் தேனி, வத்தலக்குண்டு உட்பட பகுதிகளிலிருந்து நாள்தோறும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.இதனால், மலர்களின் விலை விசேஷ நாட்களில், பல மடங்கு உயர்கிறது. அதிக பனிப்பொழிவு காரணமாக தற்போது, மல்லிகை செடிகளில் பல்வேறு நோய்த்தாக்குதல் காணப்படுகிறது. ஆனால், அவற்றை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் எவ்வித வழிகாட்டுதலும் வழங்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.புதிய தொழில்நுட்பங்களான சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், நீர் வழி உரம் ஆகியவற்றை உடுமலை விவசாயிகள் எளிதாக பின்பற்றி, காய்கறி சாகுபடியில், அதிக விளைச்சல் பெற்று வருகின்றனர். எனவே, ரோஜா உட்பட மலர்களை உற்பத்தி செய்வதற்கான பசுமை குடில் முறை மற்றும் பிற மலர்களுக்கு விதை மானியம் ஆகியற்றை வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X