பொது செய்தி

தமிழ்நாடு

இளநீர் கொள்முதல் பண்ணை விலை ரூ.20

Added : நவ 23, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை, 20 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், இளநீர் வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று, 23ம் தேதி முதல் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எடையை கணக்கிட்டு

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை, 20 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், இளநீர் வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று, 23ம் தேதி முதல் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எடையை கணக்கிட்டு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இரண்டு மாதங்களுக்கு பின் தற்போது தான், இளநீர் விலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது. தேவை அதிகரித்தால், விலை உயரும், என, ஆனைமலை தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X