பொது செய்தி

தமிழ்நாடு

நிஷ்தா பயிற்சிக்கு வீடியோ பதிவுகள் கல்வியியல் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:ஆசிரியர்களுக்கான நிஷ்தா பயிற்சியில், உளவியல் ரீதியான விளக்கங்களுக்கும் வீடியோ பதிவுகள் தயார் செய்ய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் பணிகளை துவக்கியது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது குறித்து, 'நிஷ்தா' (தேசிய அளவில் கல்வி முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு) எனப்படும்

உடுமலை:ஆசிரியர்களுக்கான நிஷ்தா பயிற்சியில், உளவியல் ரீதியான விளக்கங்களுக்கும் வீடியோ பதிவுகள் தயார் செய்ய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் பணிகளை துவக்கியது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது குறித்து, 'நிஷ்தா' (தேசிய அளவில் கல்வி முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு) எனப்படும் பயிற்சியை கடந்தாண்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டில், நிஷ்தா அடுத்தகட்ட பயிற்சி குறித்து, உடுமலை கல்வி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்குமே இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி வட்டார அளவில், டெலிகிராம் செயலி மூலம், ஆசிரியர்களை இணைத்து, குழு உருவாக்கவும், கல்வித்துறை அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 'பாலின சமத்துவம்', மற்றும் உளவியல் ரீதியான செயல்பாட்டில், 'மழைநாள்' என்ற தலைப்புகளிலும், மனித வள மேம்பாட்டு துறை அளித்துள்ள வீடியோவின் மாதிரியாக தயாரிக்கின்றனர்.திருமூர்த்திநகர் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் வழிகாட்டுதலில், இந்த கருத்துகளின் அடிப்படையில் வீடியோவாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் வீடியோக்கள் பதிவிட இருப்பதாக, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X