பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவியர் டாக்டர் கனவு நனவானது!

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:'அரசு இட ஒதுக்கீடால், டாக்டர் கனவு நனவாகி உள்ளது,' என, அரசுப்பள்ளியில் படித்து, மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த மாணவியர் தெரிவித்தனர்.அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்தது. இதில், பொள்ளாச்சி, வடசித்துாரை சேர்ந்த சிறு வியாபாரி

பொள்ளாச்சி:'அரசு இட ஒதுக்கீடால், டாக்டர் கனவு நனவாகி உள்ளது,' என, அரசுப்பள்ளியில் படித்து, மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த மாணவியர் தெரிவித்தனர்.அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்தது. இதில், பொள்ளாச்சி, வடசித்துாரை சேர்ந்த சிறு வியாபாரி சுப்புலட்சுமியின், மகள் குணவர்த்தினிக்கு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியிலும்; பொள்ளாச்சி சி.டி.சி., மேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமியின் மகள் அர்ச்சனாவுக்கு, ஸ்டான்லி கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது.மாணவி குணவர்த்தினி கூறுகையில், ''அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், டாக்டர் கனவு நனைவாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது, உள் இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. டாக்டருக்கு படிக்க இடமும், படிப்புக்கான செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்,'' என்றார். மாணவி அர்ச்சனா கூறுகையில், ''சிறு வயது முதல் மருத்துவராக வேண்டும் என கனவு இருந்தது. முதல் முறை தேர்வு எழுதி மதிப்பெண் பெற முடியாத போது, மீண்டும் விடா முயற்சியாக பயிற்சி பெற்று இரண்டாவது முறை தேர்வு எழுதினேன். அரசு வழங்கிய உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததுடன், எனது கனவு நனவாக வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X