பொது செய்தி

தமிழ்நாடு

'பைக்'கில் பயணிக்கும் இளைஞர்களால் கட்டுக்கடங்காத கூட்டம்!வனப்பகுதியில் அதிகரிக்கும் அத்துமீறல்

Added : நவ 23, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு தினமும், 'இ-பாஸ்' பயன்படுத்தி, 'பைக்'களில் கூட்டமாக வரும் சுற்றுலா பயணிகளால், வனச்சூழல் பாதிப்பதுடன், மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறைக்கு, தமிழகம், கேரளா உள்பட, இந்தியா முழுவதிலும் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆழியாறில், பூங்கா,

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு தினமும், 'இ-பாஸ்' பயன்படுத்தி, 'பைக்'களில் கூட்டமாக வரும் சுற்றுலா பயணிகளால், வனச்சூழல் பாதிப்பதுடன், மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறைக்கு, தமிழகம், கேரளா உள்பட, இந்தியா முழுவதிலும் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆழியாறில், பூங்கா, அணைப்பகுதி, தடுப்பணை, குரங்கு அருவி; வால்பாறையில், சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை, பாலாஜி கோவில் உள்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன.கொரோனா பாதிப்பு காரணமாக, ஆழியாறு, வால்பாறை பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சுற்றுலா பயணிகள் வால்பாறையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக, 'பைக்', கார்களில் வந்து செல்கின்றனர்.'இ-பாஸ்' கட்டாயம்வால்பாறை வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்கவும், அக்., 16ம் தேதி முதல், வால்பாறை செல்ல 'இ-பாஸ்' கட்டாயமாக்கப்பட்டது. 'இ-பாஸ்' பெறாமல் வருவோரை தடுக்க, ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் முகாம் அமைத்து கண்காணிக்கின்றனர். 'இ-பாஸ்' பெறாமல் வருவோரை, சோதனைச்சாவடியிலேயே திருப்பி அனுப்புகின்றனர்.கட்டணக்கொள்ளைமக்கள், https://eregister.tnega.org/ என்ற இணையத்தளத்தில் 'இ-பாஸ்' பதிவு செய்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பலரும், 'டூரிஸ்ட்' என்ற காரணத்தை உள்ளீடு செய்து, பத்து நிமிடங்களுக்குள் வால்பாறை செல்ல அனுமதி பெறுகின்றனர்.இந்நிலையில், ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே, இரண்டு தனியார் சேவை மையங்கள் உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம், நுாறு ரூபாயும், கேரள சுற்றுலா பயணிகளுக்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலித்து, 'இ-பாஸ்' விண்ணப்பித்து பெற்றுத்தருகின்றனர்.சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, இலவசமாக பெற வேண்டிய 'இ-பாஸ்', அதிக செலவு செய்து பெற்று வால்பாறை செல்கின்றனர்.வனச்சூழல் பாதிப்புஆழியாறு குரங்கு அருவியிலிருந்து, வால்பாறை வரை, வனத்துறையினர் ரோந்து சென்று, ரோட்டோரம் நிற்கும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து, குப்பை கொட்டுவோர், மது அருந்துவோர் மீது, அபராதம் விதித்து வந்தனர். தற்போது, ரோந்து செல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால், சுற்றுலா பயணிகள் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்துவது, வனவிலங்குகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி 'செல்பி' எடுப்பதுடன், உணவு வழங்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர், புகைப்பிடிப்பதுடன், மது அருந்திவிட்டு பாட்டில்களை வனத்தில் உடைத்தெறிந்து, வனச்சூழலை பாழ்படுத்துகின்றனர்.கட்டுப்பாடு தேவைதொடர்ச்சியாக, பத்துக்கும் மேற்பட்ட பைக்குகளில், அதிக ஒலி எழுப்பும் 'சைலன்சர்' பொருத்திய வாகனங்களில், 'பைக் ரைடர்ஸ்' வால்பாறை சென்று, வன அமைதியை கெடுக்கின்றனர். இந்த அத்துமீறல்களை, வனத்துறை, போலீசார், வட்டார போக்குவரத்து துறையினர் கண்டும் காணாமல் மெத்தனமாக உள்ளனர்.மாவட்ட மாவட்ட நிர்வாகம், சுற்றுலா என்ற பெயரில், 'பைக் ரைடர்ஸ்' அத்துமீறி நடந்து கொள்வதை தடுக்க, 'இ-பாஸ்' நடைமுறையில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், கொரோனா இல்லாத வால்பாறையில், தொற்று பரவல் அதிகரிக்கும்; வனச்சூழலும் பாதிக்கும் என்பது நிதர்சனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X