பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் வடிகால் அளவீடு பணிகள் துவக்கம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகருக்குட்பட்ட நெடுஞ்சாலையில், வடிகால் அமைக்கும் திட்டத்துக்கு அளவீடு பணி நடக்கிறது.பொள்ளாச்சி நகர எல்லைக்கு உட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விரிவாக்க திட்டத்தில், வடிகாலும் கட்டப்படுகிறது. ஏற்கனவே விரிவாக்கப்பட்ட ரோடுகளில், வடிகால் அமைக்கவில்லை. எனவே, திட்டத்தை முழுமையாக்கும் நோக்கில், விரிவாக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகருக்குட்பட்ட நெடுஞ்சாலையில், வடிகால் அமைக்கும் திட்டத்துக்கு அளவீடு பணி நடக்கிறது.பொள்ளாச்சி நகர எல்லைக்கு உட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விரிவாக்க திட்டத்தில், வடிகாலும் கட்டப்படுகிறது. ஏற்கனவே விரிவாக்கப்பட்ட ரோடுகளில், வடிகால் அமைக்கவில்லை. எனவே, திட்டத்தை முழுமையாக்கும் நோக்கில், விரிவாக்கம் செய்யப்பட்ட ரோடுகளில் வடிகால் அமைக்க அளவீடு பணிகள் துவங்கப்பட்டது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, வடுகபாளையம் ரயில்வே கேட் வரையிலான பாலக்காடு நெடுஞ்சாலை பகுதி, சில ஆண்டுகளுக்கு முன்பே நான்கு வழியாக விரிவாக்கப்பட்டது. தற்போது, ரயில்வே கேட்டை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணியும் நடக்கிறது.இந்நிலையில், விரிவாக்கப்பட்ட பாலக்காடு ரோட்டில், வடிகால் வசதி அமைப்பதற்கான அளவீடு பணியை நெடுஞ்சாலை துறை துவங்கியுள்ளது. மற்ற ரோடுகள் விரிவாக்க பணியுடன் சேர்த்து, வடிகால் அமைக்கும் பணியும் செய்யப்படும். இதனால், ரோட்டில் மழைநீர் தேக்கம் தவிர்க்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X