பொது செய்தி

தமிழ்நாடு

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியீடு: வேளாண் துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:நபார்டு வங்கி சார்பில், திருப்பூர் மாவட்டத்துக்கு, 13 ஆயிரத்து, 778 கோடி ரூபாய் மதிப்பில், கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தின் வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.அதன்படி, வேளாண்துறை, தொழில்துறை, கல்விக்கடன், மகளிர் குழு கடன், முன்னுரிமை கடன்கள் வழங்கப்படுகிறது.

உடுமலை:நபார்டு வங்கி சார்பில், திருப்பூர் மாவட்டத்துக்கு, 13 ஆயிரத்து, 778 கோடி ரூபாய் மதிப்பில், கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தின் வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.அதன்படி, வேளாண்துறை, தொழில்துறை, கல்விக்கடன், மகளிர் குழு கடன், முன்னுரிமை கடன்கள் வழங்கப்படுகிறது. மாவட்டம் தோறும், 2021 -22ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை, மாவட்டம் வாரியாக வெளியிடப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை, 13 ஆயிரத்து, 778 கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், அறிக்கையை வெளியிட, நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் ராஜூ பெற்றுக்கொண்டார்.ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுடன், மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கிட்டு, கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய திட்ட அறிக்கை, விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதாகவும், விவசாய விளை பொருட்களை ஒருங்கிணைப்பதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வேளாண்துறை - 3,771.95 கோடி (27.38 சதவீதம்), சிறு, குறு தொழில்களுக்கு - 7,733.88 கோடி (56.13 சதவீதம்), ஏற்றுமதி கடன் -562.50 கோடி (4.08 சதவீதம்), கல்வி கடன் - 278.74 கோடி (2.02 சதவீதம்), வீட்டுக்கடன் -270.33 கோடி (1.96 சதவீதம்).மரபுசாரா எரிசக்திக்கு -567.34 கோடி (4.12 சதவீதம்), மகளிர் குழு உள்ளிட்ட பிற கடனாக - 572.90 கோடி (4.16 சதவீதம்), சமூக உட்கட்டமைப்பு கடன் -20.25 கோடி (0.15 சதவீதம்) என கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''கடந்த ஆண்டை காட்டிலும், ஒரு சதவீதம் கூடுதலான மதிப்பில், 'நபார்டு' வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது; தொழில்துறை மற்றும் வேளாண்துறைக்கு கூடுதல் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X