பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம்!

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 17ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி

பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 17ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், முகாம் நடந்தது.ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாமில், பெயர் சேர்க்க, படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம்- 8 பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் - 8ஏ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்று மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சிறப்பு முகாம்களை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், இரண்டாம் கட்ட முகாம், டிச., 12 மற்றும், 13ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு மையங்களில் நடத்தப்பட உள்ளது.வால்பாறைவால்பாறையில், 68 வாக்குச்சாடிகளில் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர் அங்கேயே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.வருவாய்த்துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தாசில்தார் ராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மூர்த்தி முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிப்பெருக்கியில் பேசினார்.உடுமலைஉடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், மக்கள் பார்வைக்கு பட்டியல் வைக்கப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்த பணிகளை, டிச.,15 வரை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வசதிக்காக, ஓட்டுச்சாவடி மையங்களில், கடந்த இரு நாட்களாக, சிறப்பு முகாம் நடந்தது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். சிறப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பட்டியலில் பெயர் சேர்க்க கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டனர். -- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X