அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலினின் போலி சரக்கு சந்தையில் விலை போகாது'

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், அரசுப்பள்ளியில் படித்து, மருத்துவ கல்லுாரிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியர் குணவர்த்தினி, அர்ச்சனாவுக்கு பாராட்டு விழா, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாணவியர் இருவருக்கும் பாராட்டு தெரிவித்து, தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், அரசுப்பள்ளியில் படித்து, மருத்துவ கல்லுாரிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியர் குணவர்த்தினி, அர்ச்சனாவுக்கு பாராட்டு விழா, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாணவியர் இருவருக்கும் பாராட்டு தெரிவித்து, தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.துணை சபாநாயகர் கூறியதாவது:தமிழக முதல்வர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கல்வி செலவை அரசே ஏற்றுள்ளது. மக்கள் நலனை சிந்தித்து செயல்படக்கூடிய முதல்வராக இ.பி.எஸ்., உள்ளார். அரசு அறிவிப்புகளை, 'காப்பி' அடித்து, அறிக்கையாக வெளியிட்டு ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார். அவரது போலி சரக்கு இனி சந்தையில் விலைபோகாது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X