பொது செய்தி

தமிழ்நாடு

புழு வளர்ப்பு மனைகள் மீண்டும் 'பிஸி!' பட்டுக்கூடு விலை உயர்வால் மாற்றம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:வெண்பட்டுக்கூடுகள் விலை சீராகி வருவதால், புழு வளர்ப்பு மனைகளில், மீண்டும் உற்பத்தியை விவசாயிகள் சீராக்கியுள்ளனனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, 3 ஆயிரம் ஏக்கருக்கும், அதிகமாக, விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றம், தரமான மல்பெரி இலை உற்பத்தி, கொள்முதல் மையங்களில் நிலையான விலை ஆகிய காரணங்களை

உடுமலை:வெண்பட்டுக்கூடுகள் விலை சீராகி வருவதால், புழு வளர்ப்பு மனைகளில், மீண்டும் உற்பத்தியை விவசாயிகள் சீராக்கியுள்ளனனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, 3 ஆயிரம் ஏக்கருக்கும், அதிகமாக, விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றம், தரமான மல்பெரி இலை உற்பத்தி, கொள்முதல் மையங்களில் நிலையான விலை ஆகிய காரணங்களை அடிப்படையாகக்கொண்டு, புழு வளர்ப்பு மனைகளில், பட்டுப்புழு வளர்ப்பை விவசாயிகள் திட்டமிடுகின்றனர்.கொரோனா தொற்று ஊரடங்கின் போது, பட்டுக்கூடுகள் விலை, கிலோ, 200 ரூபாய் அளவுக்கு சரிந்து, தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அரசு கொள்முதல் மையங்களில், விலை நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெண்பட்டுக்கூடுகளின் விலை தர்மபுரி, கோவை உட்பட அரசு கொள்முதல் மையங்களில், அதிகரித்து வருகிறது. தரத்தின் அடிப்படையில், கிலோவுக்கு, 380 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.மேலும், பரவலாக பெய்த மழைக்குப்பிறகு, மல்பெரி செடிகள் துளிர் விட்டு, இலைகள் உற்பத்தி கூடுதலாகியுள்ளது. எனவே, புழு வளர்ப்பு மனைகளில், வெண்பட்டுக்கூடுகள் வளர்ப்பை விவசாயிகள் மீண்டும் சீராக்கியுள்ளனர்.பிற பகுதிகளில் உள்ள, கொள்முதல் மையங்களுக்கு பட்டுக்கூடுகளை எடுத்துச்செல்லும், செலவை குறைக்கும் வகையில், அருகருகே உள்ள விவசாயிகள், ஒரே நேரத்தில், பட்டுப்புழு வளர்ப்பை துவக்குகின்றனர். இதனால், வரும் மாதங்களில், உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X