பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி முன் அறப்போராட்டம்: ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், கட்சியின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பல்லடம் ரோடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், கட்சியின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பல்லடம் ரோடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:சட்டசபை தேர்தலில் பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம், திண்ணை பிரசாரங்களை மேற்கொண்டு தி.மு.க., வை வெற்றி பெற வைத்து, ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.வாக்காளர் சிறப்பு முகாமில் பங்கேற்று, விடுபட்ட பெயர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இன்னும் இழுபறியாக நடக்கிறது. டிச., மாதம், இத்திட்டத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என, தொகுதி எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார். அந்த கால கட்டத்துக்குள் திட்டத்தை நிறைவு செய்யாவிட்டால், நகராட்சி அலுவலகம் முன் அறப்போராட்டம் நடத்தப்படும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X