சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணை நீரில் மூழ்கி இளைஞர் பலி

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை, எஸ்.வி., மில் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன் ஆதிஷ்விஷ்ணு, 24. சென்னையிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர், தனது நண்பர்களுடன் அமராவதி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அணையின் ஆபத்தான பகுதியில் நண்பர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அணை நீரில் தவறி விழுந்த ஆதிஷ்விஷ்ணு, நீரில் மூழ்கினார்.

உடுமலை:உடுமலை, எஸ்.வி., மில் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன் ஆதிஷ்விஷ்ணு, 24. சென்னையிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர், தனது நண்பர்களுடன் அமராவதி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அணையின் ஆபத்தான பகுதியில் நண்பர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அணை நீரில் தவறி விழுந்த ஆதிஷ்விஷ்ணு, நீரில் மூழ்கினார். தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அணைக்கு மூழ்கியவரை, சடலமாக மீட்டனர். அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'எச்சரிக்கைைய மீறி சென்று, தவறி விழுந்து இறந்துள்ளார். சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X