குளத்து கரைகளை சீரமைக்க ஒன்றிய நிர்வாகத்துக்கு கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளத்து கரைகளை சீரமைக்க ஒன்றிய நிர்வாகத்துக்கு கோரிக்கை

Added : நவ 23, 2020
Share
உடுமலை:உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், 70க்கும் மேற்பட்ட குளங்கள், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்குளங்களில், சில ஆண்டுகளுக்கு முன், இலவசமாக வண்டல் மண் அள்ளிக்கொள்ள, தமிழக அரசு அனுமதியளித்தது; பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர்.தற்போது, நான்கு வழிச்சாலை பணிக்காகவும், குளங்களில், கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, மண்

உடுமலை:உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், 70க்கும் மேற்பட்ட குளங்கள், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்குளங்களில், சில ஆண்டுகளுக்கு முன், இலவசமாக வண்டல் மண் அள்ளிக்கொள்ள, தமிழக அரசு அனுமதியளித்தது; பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர்.தற்போது, நான்கு வழிச்சாலை பணிக்காகவும், குளங்களில், கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, மண் அள்ளுவதற்காக, குளத்தின் கரைகளை சேதப்படுத்தி, வழித்தடம் அமைக்கின்றனர்.பின்னர், எவ்வித சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். கணபதிபாளையத்திலுள்ள குளத்திலும் கரையில், மண் சரிவு ஏற்பட்டு, சீரமைக்கப்படாமல் அவல நிலையில் உள்ளது.ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை. இதனால், மழைக்காலத்தில், குளங்களுக்கு வரும் தண்ணீர் தேங்காமல் வெளியேறுகிறது. குளங்கள் நிரம்பி, உபரி நீர் வெளியேறும், மதகுகளும், பராமரிப்பில்லாமல், இடிந்து காணப்படுகிறது. இவ்வாறு, நீர்நிலைகள் பாழாகி வருவது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால், நீர்நிலைகள் பராமரிப்புக்காக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், குடிமராமத்து உட்பட திட்டங்களின் கீழ், மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்த பல லட்ச ரூபாய் நிதி வீணாகும்; கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயராமல் வறட்சி ஏற்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X