பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகளில் கண்காணிப்பு: அசம்பாவிதம் தவிர்க்க நடவடிக்கை

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆனைமலை:ஆழியாறு, ஆனைமலை பகுதியிலுள்ள தடுப்பணைகளில், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.ஆழியாறு பூங்கா, குரங்கு அருவிகளில், கொரோனா பாதிப்பு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால், ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை பகுதியிலுள்ள தடுப்பணைகளில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த வாரம் சனி,

ஆனைமலை:ஆழியாறு, ஆனைமலை பகுதியிலுள்ள தடுப்பணைகளில், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.ஆழியாறு பூங்கா, குரங்கு அருவிகளில், கொரோனா பாதிப்பு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால், ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை பகுதியிலுள்ள தடுப்பணைகளில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும், தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.நேற்று, பல பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், வழக்கம் போல தடுப்பணை பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். இதை கட்டுப்படுத்த, நேற்று, காலை, 8:00 மணி முதலே, தடுப்பணை பகுதிகள், வழித்தடங்களில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், தடுப்பணைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், போலீசாருடன் இணைந்து வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில், கண்காணிப்பு மேற்கொண்டால், உயிரிழப்புகளை தவிர்க்க முடியும், கொரோனா பரவலும் குறையும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202015:53:25 IST Report Abuse
Ram Pollachi வயசு பிள்ளைகளை தண்ணி தெளித்து விட்டு விட்டார்களா இன்றைய பெற்றோர்கள்? குறைந்தபட்சம் அவர்கள் அணியும் ஆடைகளைக் கூட பார்க்க மாட்டார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X