பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ வழிமுறைகள் நோயின்றி வாழ இதுவே வழி

Added : நவ 23, 2020
Share
Advertisement
குன்னுார்:''இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்தால், நோயின்றி வாழலாம்,'' என, தேசிய இயற்கை மருத்துவ தினத்தில் வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி) நவ., 18ம் தேதியை, இயற்கை மருத்துவ தினமாக அறிவித்துள்ளது.இதனையொட்டி, குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில், 3வது ஆண்டு, தேசிய இயற்கை மருத்துவ

குன்னுார்:''இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்தால், நோயின்றி வாழலாம்,'' என, தேசிய இயற்கை மருத்துவ தினத்தில் வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி) நவ., 18ம் தேதியை, இயற்கை மருத்துவ தினமாக அறிவித்துள்ளது.இதனையொட்டி, குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில், 3வது ஆண்டு, தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமை வகித்து துவக்கிவைத்தார்.இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ரமேஷ் பேசுகையில்,''வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவு பழக்கவழக்கங்களால், பல்வேறு உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அல்சர், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மலச்சிக்கல், கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற நோய்கள் ஏற்படுகிறது.உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, அக்குபஞ்சர், காந்த சிகிச்சை, யோகா பயிற்சி போன்ற இயற்கை சிகிச்சைகள் நம்மை இயற்கையோடு ஒன்றி, வாழ வழி வகுக்கும். இந்த மருத்துவ முறைகளை கடைபிடித்தால், நோயின்றி வாழலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X