பொது செய்தி

தமிழ்நாடு

தேசியம் காக்க 10 ஆயிரம் புத்தகங்கள் : குன்னூரில் வினியோகம் துவக்கம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில், 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' என்ற தலைப்பில், தெய்வீக தமிழக சங்கம் சார்பில், 10ஆயிரம் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி துரிதமாக நடந்து வருகிறது.குன்னுார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெய்வீக தமிழக சங்கம் சார்பில், 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' என்ற தலைப்பிலான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.சங்க பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்,

குன்னுார்:குன்னுாரில், 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' என்ற தலைப்பில், தெய்வீக தமிழக சங்கம் சார்பில், 10ஆயிரம் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி துரிதமாக நடந்து வருகிறது.குன்னுார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெய்வீக தமிழக சங்கம் சார்பில், 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' என்ற தலைப்பிலான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.சங்க பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், வண்டிச்சோலை ஆஸ்ரம மாதாஜி ஜீவன் முக்தாநந்தா புத்தகம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதில், 'பல கலைகள் கொண்ட நாகரிகம்; பண்பாடு, கலாசாரம் நிறைந்த தமிழகத்தில், எதிலும் ஊழல்; பயங்கரவாதம், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்; குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம் இந்துசமய பெருமைகளை சொல்லி வளர்ப்பது; மதமாற்றத்தை தடுப்பது; உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவது, பயங்கரவாதிகளை முறியடிப்பது, இந்துக்களை அவமதிக்கும் அரசியல் கட்சிகளை புறகணிப்பது,' என்பன போன்ற விழிப்புணர்வு வீடு தோறும் ஏற்படுத்தப்பட்டது. இதன் படி, குன்னுார் நகராட்சி மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 10 ஆயிரம் பேருக்கு இந்த புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.* ஊட்டி மெயின் பஜார் ஜெயின் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், தெய்வீக தமிழக சங்கம் குறித்து, ஆன்மிக வாதிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர். மோத்திலால் கட்டாரியா, சங்க புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து வார்டுகளிலும் புத்தகம் வீடு, வீடாக கொடுத்து பிரசாரம் செய்யும் பணி துவங்கியது. பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன் ராஜ், நகர செயலாளர் பிரவீன், சுரேஷ்குமார், ராஜேந்திரன் உட்பட ஆன்மிகவாதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X