பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை கிலோ ரூ.1000

Added : நவ 23, 2020
Share
Advertisement
திருப்பூர்:சத்தியமங்கலம், திண்டுக்கல், ஓசூர், சேலம் பகுதியில் இருந்து, தினமும், இரண்டு டன் மல்லிகை பூக்கள், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். ஒரு வாரமாக பனிப்பொழிவு நிலவுவதால், செடிகளில் மொட்டு மலர்வதில்லை. எதிர்பார்க்கும் அளவு பூக்கள் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.இரு தினங்களாக, 1.5 டன் பூக்கள் மட்டுமே வந்த நிலையில், நேற்று 600 கிலோ மட்டுமே வந்தது.

திருப்பூர்:சத்தியமங்கலம், திண்டுக்கல், ஓசூர், சேலம் பகுதியில் இருந்து, தினமும், இரண்டு டன் மல்லிகை பூக்கள், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். ஒரு வாரமாக பனிப்பொழிவு நிலவுவதால், செடிகளில் மொட்டு மலர்வதில்லை. எதிர்பார்க்கும் அளவு பூக்கள் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.இரு தினங்களாக, 1.5 டன் பூக்கள் மட்டுமே வந்த நிலையில், நேற்று 600 கிலோ மட்டுமே வந்தது. மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக மல்லிகை பூ வருவதால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.நேற்று ஒரு கிலோ மல்லிகை, 1,000 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 700 ரூபாய். அதே நேரம், ஆயுத பூஜை சீசன் நிறைவடைந்து விட்டதால் சம்பங்கி கிலோ, 50 ரூபாயாக குறைந்திருந்தது.பூ வியாபாரிகள் கூறுகையில், 'தீபத்திருநாளுக்கு பின் வரும் முகூர்த்தங்களில், திருமணங்கள் அதிகம் நடப்பதில்லை. கார்த்திகை மாதத்தில் இன்னும் ஒரு முகூர்த்தம், 26ம் தேதி உள்ளது.வரத்து குறைவால், முகூர்த்த நாளில் விலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X