கோவில் பூசாரிகள் தவிப்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
பல்லடம்:கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அறிக்கை:பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி, தமிழகம் முழுதும் உள்ள முதிய பூசாரிகள் உயர்த்தி வழங்கப்பட்ட வருமான சான்றிதழை பெற்று, ஓய்வூதிய விண்ணப்பத்துடன், மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்துக்கு தபால்

பல்லடம்:கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அறிக்கை:பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி, தமிழகம் முழுதும் உள்ள முதிய பூசாரிகள் உயர்த்தி வழங்கப்பட்ட வருமான சான்றிதழை பெற்று, ஓய்வூதிய விண்ணப்பத்துடன், மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்துக்கு தபால் அனுப்பினர். விண்ணப்ப மனுக்களை அலுவலகத்தில் கோப்பாக வைத்திருக்க வேண்டும். அரசாணை வெளியானபின் விண்ணப்பங்களை தேர்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை பூசாரிகளுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்த, அறநிலைய துறை ஆணையர், மாவட்ட உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X