பொது செய்தி

தமிழ்நாடு

'மடிவீக்க நோய் மாயமாக சுகாதாரம் அவசியம்'

Added : நவ 23, 2020
Share
Advertisement
பல்லடம்:பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, உதவி பேராசிரியர் சித்ரா ஆகியோர் கால்நடைகளை பாதிக்கும் மடிவீக்க நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அவர்கள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், 2.14 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. கறவை மாடுகளை பாதிக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய். இவற்றால் பால்

பல்லடம்:பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, உதவி பேராசிரியர் சித்ரா ஆகியோர் கால்நடைகளை பாதிக்கும் மடிவீக்க நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அவர்கள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், 2.14 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. கறவை மாடுகளை பாதிக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய். இவற்றால் பால் உற்பத்தி இழப்பு, பாலின் தரம் குறைதல், மருத்துவ செலவு ஆகியவற்றால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது.கால்நடைகளின் இனப்பெருக்க திறனையும் இது குறைக்கும். கருமுட்டை வெளியாதல், கரு உருவாதல், சினை பிடித்தல் உள்ளிட்ட இனப்பெருக்க செயல்பாடுகள் தடைபடும். 250க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் மடிவீக்க நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.கறவை மாடுகள் வளர்ப்போர் மாட்டு தொழுவம் மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக உலர்ந்த நிலையில் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். தரையில் மேடு பள்ளங்கள் இன்றியும், மாடுகளின் மடியை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுக்காமல் இருக்க தீவனங்கள் கொடுக்க வேண்டும்.மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை மனிதர்கள், கன்றுகள் அருந்தினால், தீவிர இதய தசை அலர்ஜி ஏற்பட்டு இறப்பை சந்திக்க நேரிடும். வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க, கால்நடை விவசாயிகள் கறவை மாடு பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X