அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் பா.ஜ., பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு கைது

Added : நவ 23, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் தடை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் நேற்று பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. 'வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியில்லை' எனக் கூறி, நடிகை

திருப்பூர்:திருப்பூரில் தடை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் நேற்று பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. 'வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியில்லை' எனக் கூறி, நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை, போலீசார் கைது செய்தனர்.முன்னதாக கூட்டத்தில், நடிகை குஷ்பு பேசியதாவது: மக்கள் பிரச்னையை தீர்க்கும் தலைவராக மோடி உள்ளார். பல திட்டங்களை, தமிழகத்துக்கு பா.ஜ., அரசு தந்துள்ளது. ஆளும் கட்சி என்ன செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதுதான், காங்கிரஸ் கொள்கை. புதிய கல்விக் கொள்கைக்கு நான் ஆதரவாக பேசிய போது எனக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்க்கும் தி.மு.க.,வில் எத்தனை பேர் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.வேல் யாத்திரை அவசியமா என்கின்றனர். அவசியம் மட்டுமல்ல... அத்தியாவசியம். தி.மு.க., தலைவர்கள் வீட்டில் யாரும் கோவிலுக்கு போவதில்லையா? மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.'பதிலடி தரணும்'முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மண்டைக்காடு அம்மனை, 1982ல் அவமதித்த கூட்டம் இன்று, முருகனை சீண்டிப் பார்த்துள்ளது. அப்போது அந்த பகுதி இந்து மக்கள் எழுச்சி பெற்று போராடினர். அது போல் இன்று ஒட்டு மொத்த தமிழகமும், முருகனை சீண்டிய அந்த கயவர் கூட்டத்துக்கு எதிராக திரண்டு நிற்கிறது. அதன் அடையாளம் தான் இந்த வேல் யாத்திரை.பிரதமர் மோடி தமிழ் மக்களின், தமிழ் மொழியின் முன்னேற்றத்துக்கு நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறார். ஆனால் தமிழ் மொழியை வைத்து அரசியல் நடத்தி வரும் கூட்டம் இதை எதிர்க்கிறது. அந்த கும்பலுக்கு தமிழக மக்கள் ஒன்று கூடி பதிலடி தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X