பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் காங்., ஏர்கலப்பை பேரணி: திருப்புமுனையாக அமையும் என சூளுரை

Added : நவ 23, 2020
Share
Advertisement
கோவை:''கோவையில் நடக்கும் காங்., எழுச்சி மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்,'' என, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார்.கோவை, கருமத்தம்பட்டி, சோமனுார் ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. மாநாடு முடிந்து நேற்றிரவு, ஏர்கலப்பை பேரணி நடத்தினர். கருமத்தம்பட்டி-சோமனுார் ரோட்டில் ஏர்கலப்பைகளுடன்

கோவை:''கோவையில் நடக்கும் காங்., எழுச்சி மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்,'' என, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார்.கோவை, கருமத்தம்பட்டி, சோமனுார் ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. மாநாடு முடிந்து நேற்றிரவு, ஏர்கலப்பை பேரணி நடத்தினர். கருமத்தம்பட்டி-சோமனுார் ரோட்டில் ஏர்கலப்பைகளுடன் பேரணியாக சென்றனர். போலீசார் அனுமதி மறுத்து, பேரிகார்டுகள் அமைத்து தடுத்தனர். இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி அன்னுார் ரோடு வரை பேரணி சென்ற, மாநில காங்., தலைவர் அழகிரி உள்பட, 85 பேரை போலீசார் நிறுத்தி, அருகே இருந்த கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். பின், சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், 'கோவையில் நடக்கும் இந்த எழுச்சி மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு என்று பா.ஜ., அரசு பல்வேறு வகைகளில் மக்களின் முதுகில் குத்தியது. இப்போது விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை' என்றார்.தேவையை கேட்டு பெறுவோம்!தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமை வகித்து பேசியதாவது:சாமானிய மக்கள் அதிகளவு இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக உள்ளது. விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற கோரி தான், கோவையில் எழுச்சி மாநாடு மற்றும் ஏர்கலப்பை பேரணி நடத்தப்படுகிறது. இந்த சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும்.காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தான், 77 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. ஆன்மிகம் என்பது வேறு; மதம் என்பது வேறு. காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மதசார்பின்மை என்ற கொள்கையில் ஒத்துபோவதால் தான் கூட்டணியாக உள்ளோம்.பீகாரில் தோல்வியடையவில்லை; வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணி தான் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.தேசிய செயலாளர் சஞ்சய்தத், எம்.பி., ஜோதிமணி, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மனாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X