பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான 48 பேர் கண்டுபிடிப்பு: பலன் தந்தது சிறப்பு முகாம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
கோவை:காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக நடந்த சிறப்பு முகாமில், 48 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.கோவை மாவட்டத்தில், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கோவை எஸ்.பி., அலுவலகம் உட்பட பல்வேறு பகுதியில் நடந்த இம்முகாம்களில், 108 புகார்தாரர்கள் பங்கேற்றனர். கடந்த, 16ம் தேதி வரையிலான காலத்தில், 138 ஆண்கள், 106 பெண்கள், ஐந்து சிறுவர்கள், 34 சிறுமிகள் என, 283

கோவை:காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக நடந்த சிறப்பு முகாமில், 48 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.கோவை மாவட்டத்தில், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கோவை எஸ்.பி., அலுவலகம் உட்பட பல்வேறு பகுதியில் நடந்த இம்முகாம்களில், 108 புகார்தாரர்கள் பங்கேற்றனர். கடந்த, 16ம் தேதி வரையிலான காலத்தில், 138 ஆண்கள், 106 பெண்கள், ஐந்து சிறுவர்கள், 34 சிறுமிகள் என, 283 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் நடந்த முகாம்களில், காணாமல் போனவர்களின் புகைப்படங்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், காணாமல் போன, 48 பேர் கண்டறியப்பட்டனர். காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் பிரத்யேக செயலி வாயிலாக, அடையாளம் காணப்படாத சடலங்களின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. காணாமல் போய் உயிரிழந்த இருவர், இதன்படி அடையாளம் காணப்பட்டனர். மீதமுள்ள, 235 பேரை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.முன்னதாக, முகாமை மாவட்ட எஸ்.பி., அருளரசு துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X