பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூசம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தல்

Added : நவ 23, 2020
Share
Advertisement
கோவை:''தைப்பூசத்திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத்தலைவர் முருகன் வலியுறுத்தினார்.கோவை சிவானந்தாகாலனியில் நடந்த வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். வேல் யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க., தலைவர்

கோவை:''தைப்பூசத்திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத்தலைவர் முருகன் வலியுறுத்தினார்.கோவை சிவானந்தாகாலனியில் நடந்த வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். வேல் யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு துாக்கம் போய் விட்டது.ஊழல் என்பது தி.மு.க.,வுடன் பிறந்தது. ஊழலையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும் கனவு, கனவாகவே இருக்கும்.மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போல தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசுகையில், ''தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை சாதாரணமாக விடக்கூடாது. பின்னணியில் இருப்பது தி.மு.க., என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி.மு.க.வின் இந்து விரோத போக்கிற்கு எதிராக பா.ஜ., தொண்டர்கள் பொங்கி எழுந்துள்ளனர்,'' என்றார்.பா.ஜ., மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில்,'' 2021 சட்டசபை தேர்தலில் கோவை பா.ஜ., கோட்டை என்பதை நிரூபிக்கும்,'' என்றார்.பா.ஜ.,தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் பேசுகையில்,'' வரும் சட்டசபை தேர்தலில் கோவையிலிருந்து அதிக எண்ணிக்கையில்,பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்படுவர். இந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை , அமைதி காக்க முடியாது,'' என்றார்.பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சேகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X