பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., - - 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -- 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை,
medical, counselling, started, மருத்துவ படிப்பு, கவுன்சில், துவக்கம்

சென்னை: மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., - - 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -- 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 399 இடங்கள்; சிறப்பு பிரிவில், 60 இடங்கள் என, 459 இடங்கள் நிரம்பியுள்ளன.அதைத் தொடர்ந்து, பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல், டிச., 4 வரை நடைபெற உள்ளது. இன்று, பொது பிரிவில் முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அவர்களுடன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டுமே, கவுன்சிலிங் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும், கட்டாயம் முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Babu -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-202010:10:37 IST Report Abuse
Raman Babu கல்வியும் மருத்துவமும் உலகம் முழுவதும் இலவசமாக்கபட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது... எனினும் தற்சமயம் தமிழக அரசின் முடிவான அரசு பள்ளி மாணவர்களின் தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை ஏற்றுக் கொள்வது மிக சிறப்பான முடிவு... அதேபோல் அரசு கல்லூரி கட்டணமான சுமார் ரூ.1.3 லட்சம் என்பது கூட அவர்களுக்கு பெரும் தொகைதான்... எனவே, அணைத்து அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்...மேலும் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்க்கு கூடுதல் செலவு என்பது நியாயமாகாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X