அரசியல் செய்தி

தமிழ்நாடு

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?": போலீசை மிரட்டும் உதயநிதி!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (159)
Share
Advertisement
சென்னை: அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம்
Udhayanidhi, DMK, Threatening, Police, Officers, உதயநிதி, திமுக, போலீஸ், மிரட்டல்

சென்னை: அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (நவ.,22) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.


latest tamil news




இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:
என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன், மைக் பிடித்து பேச கூட இல்லை எனக்கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். அப்போது கூட்டத்தினரை சமாதானம் செய்து வன்முறை வேண்டாம் எனக் கருதி கைது செய்யுமாறு கோரினேன்.

தூண்டிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?. இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறை டிஜிபி.,யை மிரட்டும் தோனியில் உதயநிதி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



சட்டம் ஒழுங்கை காக்கும் காவல்துறை அதிகாரியை திமுக., மிரட்டுவது இது புதிதல்ல. கடந்த திமுக ஆட்சியின் போது இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஆனால் தற்போது ஆட்சியில் இல்லாதபோதும் மிரட்டல் போக்கை விடுவதாய் இல்லை.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி கூறுகையில், ‛ஆட்சியில் இல்லாதபோதே திமுக.,வினர் போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், போலீசாரின் நிலைமை என்ன ஆகும் என்பது இதிலிருந்தே தெரிகிறது,' எனக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
26-நவ-202017:14:37 IST Report Abuse
periasamy போலீஸ் ஏன் மிட்ஷா வருகையின் பொது ஆயிரக்கணக்கில் கூடியவர்களை கைது செய்யவில்லை பிறகு முருகனோடு கோ கோ விளையாடும் போலீஸ் உதயநிதியை பத்து மணி நேரம் தடையானும் இப்படி செய்யும் போலீசை மயிலிறகால் வருட முடியும்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
26-நவ-202017:08:02 IST Report Abuse
periasamy இதில் நிறைய பேர் ஒப்பாரி வைத்தாலும் ஆட்சிக்கு வர போவது தி மு கா தான் இதில் வந்து மாஞ்சு மாஞ்சு கருத்து எழுதும் நீங்கள் யாரும் ஒட்டுச் சாவடிக்கு செல்லாத கூட்டம்
Rate this:
karutthu - nainital,இந்தியா
26-நவ-202019:27:06 IST Report Abuse
karutthuகனவுகளே ஆயிரம் கனவுகளே என்ற பாட்டை அடிக்கடி பாடுங்கள் நண்பரே...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
28-நவ-202009:04:16 IST Report Abuse
sankarகருப்பர் கூட்டம் உங்களை முடித்து விட்டார்கள் . பீஜேபியினர் வேல் எடுத்து செல்வதால் திமுகவுக்கு கட்டம் கட்டப்படுவது உறுதி...
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
25-நவ-202021:59:26 IST Report Abuse
C.SRIRAM வந்தா பார்த்துக்கொள்ளலாம் . அதுக்குள்ள என்ன பந்தா ?. தப்பி தவறி கூட வாய்ப்பு கொடுக்கக்கூடாது
Rate this:
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
26-நவ-202014:26:16 IST Report Abuse
Sivasankar Ayyaduraiமுக்கியமா இவனுங்களுக்கும்...க்கும் வாய்ப்பு குடுக்க கூடாது...
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
27-நவ-202008:09:48 IST Report Abuse
Sathya Dhara தமிழகத்திற்கு துரோகம் இழைக்காதீர்கள் ..அந்த பாவம் உங்களை சும்மா விடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X