பொது செய்தி

இந்தியா

டில்லியை குலுக்கும் கொரோனா - டிரெண்டிங்கில் அச்சம்

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : தலைநகர் டில்லியில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் இடையே அச்சம் நிலவுகிறது. இதனால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
DelhiCollapsing, Corona, Covid19, AAP, arvindkejriwal,

புதுடில்லி : தலைநகர் டில்லியில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் இடையே அச்சம் நிலவுகிறது. இதனால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.

கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கடந்து சென்றன. இதனால் அநேக நகரங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. டிசம்பரில் கொரோனா முதல் அலை அளவுக்கு இரண்டாவது அலையும் இருக்கும் என உலக சுகாதாரம் எச்சரித்துள்ளது.


latest tamil news
இந்நிலையில் தலைநகர் டில்லியில் கொரோனா சில மாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இப்போது மீண்டும் அங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதோடு, இறப்பு விகிதமும் கூடுகிறது. ஏற்கனவே காற்று மாசு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் தலைநகர், இப்போது மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலையால் அச்சம் கொண்டுள்ளது. டில்லியை ஆளும் கெஜ்ரிவால் அரசு, நோயை கட்டுப்படுத்த தவறி விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

''டில்லி நிலைகுலைந்து வருகிறது. இனியாவது கெஜ்ரிவால் விழித்து கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் காற்று மாசை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் சீர் செய்ய வேண்டும் கூறி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #DelhiCollapsing என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
24-நவ-202009:07:09 IST Report Abuse
Jit Onet தில்லி விமான நிலையத்தில் கண்கூடாக கண்டது: வரும் பயணிகள் ஒரு ஹாலில் நான்கு மேஜைகளுக்கு முன்னால் நான்கு வரிசைகளில் நான்கு பரிசோதனைகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள். ஒன்றில் ஆரம்பித்து நான்கு வரிசைகளில் ஒவ்வுருவரும் நின்று வரவேண்டும். வரிசைகளில் நிற்க இடமில்லாமல் ஒருவரை ஒருவர் இடித்திக்கொண்டுதான் நிற்கிறார்கள் . கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு ஐம்பது அறுபது சீருடை பணியாளர்கள் நிற்கிறார்கள் - ஆனால் அவர்கள் ஒன்றும் செய்வதில்லை, தமக்குள்ளேயே சிறு சிறு குழுக்களாக வாமபாதித்துக்கொண்டும், டீ குடித்துக்கொண்டும், மொபைலில் என்னமோ செய்துகொண்டும் நிற்கிறார்கள். மேஜைகளுக்கு பின்னால் இருக்கும் அதிகாரிகளை கேட்டால் "சார் அது அட்மினிஸ்டரேஷன் வேலை, எங்கள் சொல்லாதீர்கள்" என்கிறார்கள். நமது மக்களும் அறிவில்லாமல் வரிசைக்கு முன்னால் முந்துகிறார்கள். இந்த கேவலமான விமான நிலையத்துக்கு ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. இத்தனைக்கு நாட்டின் தலை நகர் விமான நிலையம் என்று பெயர்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-நவ-202020:25:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan "இனியாவது கெஜ்ரிவால் விழித்து கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் காற்று மாசை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்."மத்திய அரசின் வழி காட்டுதலின் படிதான் அவர் நடவடிக்கை எடுத்திருப்பார். அவரை குற்றம் சொல்வதை பிரச்சினைக்கு தீர்வு சொல்வதே உத்தமம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-நவ-202014:31:14 IST Report Abuse
Ramesh Sargam டில்லியை மட்டுமா கொரோனா குலுக்குகிறது? கொரோனாவின் இரண்டாம் அலை உலகெங்கிலும் பரவி, உலக மக்களை அச்சுறுத்துகிறது. மருந்து நிறுவனங்களும், வாக்சின் இன்று வரும், நாளை வரும் என்று வெறும் செய்தி மேல் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. வந்தபாடில்லை. வந்த ஒரு சில வாக்சின்களும் 90 சதவிகிதம், 95 சதவிகிதம் என்று வருகிறது. மேலும் இன்னும் சோதனை அடிப்படையில்தான் இருக்கின்றன. பூரண உபயோகத்திற்கு வரவில்லை. என்று பூரண உபயோகத்திற்கு வந்து, என்று மக்கள் இந்த வைரஸ் தொல்லையிலிருந்து விடுபடுவார்களோ, இறைவா, நீதான் கதி. உன்னிடம் அடைந்தோம் சரணாகதி.
Rate this:
24-நவ-202006:12:13 IST Report Abuse
இவன் கெஜ்ரி தான் கட்டு படுத்தனும் அப்பறம் எதுக்கு முதல்வர்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X