புதுடில்லி: ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா ஜெனகாவின் கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் 50 சதவீத விலையில் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ‛கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில், இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், அவசர சிகிச்சைக்கு கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கினால், வரும் ஜனவரி, பிப்ரவரியில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும், நபர் ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இருந்து பாதி விலையில் (50 சதவீதம்) இந்தியாவுக்கு அந்நிறுவனம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE