காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனிவா: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐநா சபை தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உலக அளவில் அதிகரித்து வருவதாகவும் இதனால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ளதாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில்
UN, GreenhouseGas, LevelsHigh, Despite, Covid-19, Measures, ஐநா, கிரீன்ஹவுஸ், பசுமைஇல்லவாயு, வாயு, அதிகரிப்பு, எச்சரிக்கை

ஜெனிவா: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐநா சபை தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உலக அளவில் அதிகரித்து வருவதாகவும் இதனால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ளதாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் புகை காரணமாக இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.


latest tamil news


பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அரசு ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம் உலக அளவில் காற்று மாசு அதிகம் ஏற்படுத்தும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மற்ற சிறிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தாலும்கூட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய உலக நாடுகள் ஒத்துழைப்பால் மட்டுமே உலகில் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பெருகுவதை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐநாவின் இந்த கோரிக்கையை ஜோ பைடன் அரசு ஏற்குமா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
24-நவ-202000:48:02 IST Report Abuse
anbu தொழிற்சாலைகள் வெளிவிடும் கரியமில வாயு, வாகனங்கள் வெளிவிடும் வாயு, வர்த்தக ரீதியில் வளர்க்க படும் பண்ணை விலங்குகள் வெளிவிடும் கரியமில வாயு யாவும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது உலகுக்கு பேராபத்து ஆகும். இது பற்றி உலகம் முழுதும் பேசபடுகிறதே அன்றி எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. மூலகாரணம் எது என்று ஆராயவில்லை. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தேவையை குறைக்க வேண்டும். தேவையை குறைக்க மக்கள் தொகையை குறைக்க வேண்டும். மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது பற்றி உலகம் சிந்திக்காமல் பேசிக்கொண்டு இருந்தால் பிரயோசனம் இல்லை. மக்கள் தொகையை ஐம்பது ஆண்டுகள் முன்னம் இருந்த நிலைக்கு கொண்டு வந்தால் மட்டுமே ஏதாவது பயன் வரும். இல்லையென்றால் இயற்கை கொரானா போல பலபல வியாதிகளை உண்டு பண்ணும். மனிதன் உணர்ந்து செயல் படா விட்டால் இயற்கை சரி செய்யும். அதை இயற்கை இப்போதே ஆரம்பித்து விட்டது. மனிதா உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்.
Rate this:
Cancel
23-நவ-202023:01:16 IST Report Abuse
ஆப்பு மொச்சைக்கொட்டை உற்பத்திக்கு அகில உலக தடை விதித்துப் பாக்கலாமே...
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
23-நவ-202018:01:48 IST Report Abuse
வந்தியதேவன் கொத்து... கொத்தா... செத்தானுங்க அமெரிக்கா..காரனுங்க... இப்பகூட புத்தி வரலைன்னா... ஊஊஊஊ.. ன்னு சங்குதான்... மொத்த உலக மக்களுக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X