இந்தியாவுடன் பாக்., வங்கதேசத்தையும் இணைக்க வேண்டும்: நவாப் மாலிக் கிண்டல்

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
மும்பை: இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைத்து ஒரே நாடாக மாற்ற பாஜ., முன்வந்தால் அதை வரவேற்போம் என மஹாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கிண்டலடித்துள்ளார்.மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள 'கராச்சி ஸ்வீட்ஸ்' என்ற கடையின் பெயருக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த நிதின் நந்த்கோக்கர் ஆட்சேபனை தெரிவித்தார்.
NawabMalik, NCP, Karachi, Pakistan, India, Bangladesh, Merge, BJP, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இணைக்க வேண்டும், நவாப் மாலிக், தேசியவாத காங்கிரஸ், கராச்சி

மும்பை: இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைத்து ஒரே நாடாக மாற்ற பாஜ., முன்வந்தால் அதை வரவேற்போம் என மஹாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கிண்டலடித்துள்ளார்.

மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள 'கராச்சி ஸ்வீட்ஸ்' என்ற கடையின் பெயருக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த நிதின் நந்த்கோக்கர் ஆட்சேபனை தெரிவித்தார். 'கராச்சி' என்ற பெயரைக் கைவிடுமாறும், கராச்சி ஸ்வீட்ஸ் பெயரை மாற்றும்படியும் கடையின் உரிமையாளரிடம் நிதின் நந்த்கோக்கர் கேட்டுக்கொண்டார். கடையின் உரிமையாளரை நிதின் மிரட்டுவதாக பா.ஜ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத், ‛கராச்சி ஸ்வீட்ஸ் 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெயர் மாற்றத்திற்கான இந்தக் கோரிக்கை கட்சியின் கோரிக்கை அல்ல,' என்றார்.


latest tamil news


இப்பிரச்சனை குறித்து மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‛நாங்கள் அகண்ட பாரதம் (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரப்போகிறது,' எனக்கூறினார்.

இதற்கு மஹா., அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக், பதிலடி கொடுத்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும், அந்த நேரம் வரப்போகிறது என்று பட்னாவிஸ் கூறிய விதத்தில்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். பெர்லின் சுவரை இடிக்க முடிந்தால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் ஏன் ஒன்றாக இணைக்க முடியாது? இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைத்து ஒரே நாடாக மாற்ற பாஜ., முன்வந்தால் அதை வரவேற்போம். இவ்வாறு அவர் கிண்டலாக கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-நவ-202011:46:32 IST Report Abuse
Malick Raja பட்நாவிஸ் சொன்னால் அது நியாயம் ..உண்மை . இவர் சொன்னால் அதற்க்கு கிண்டல் .. எல்லாம் நூலிழையில் உள்ள வித்தியாசம் தான் என்பது மட்டும் உண்மை .. பெரும் இயற்கை சீற்றங்கள் இந்தியாவுக்கு வருவதை தடுக்கவே முடியாது காரணம் காழ்ப்புணர்ச்சியுள்ள கயவர் கூட்டம் இருப்பதால் .. கயவர் கூட்டம் அழித்தொழிக்க இயற்கை சீற்றம் ஒன்றே மாற்று வழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-நவ-202012:20:21 IST Report Abuse
Dr. Suriyaபாத்துகுங்கய்யா... நிவார புயலு தமிழகத்தை தாக்கணும் தமிழர்கள் அழியினுமுன்னு என்ன ஒரு நல்ல எண்ணம் இந்த ஆளுக்கு... இயற்கை சீற்றம் வரனுமாம் ...அந்தளவுக்கு மார்க்க பற்று............
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
24-நவ-202012:35:18 IST Report Abuse
mathimandhiriஉண்மை, உண்மை அனைத்தும் உண்மை. அழிய போவது மத வெறியர் கூட்டம் தான். அது தான் உலகளாவிய கயவர் கூட்டம். சாதாரண விலையேற்றம் பெட்ரோலுக்கும் உண்டு. அப்படி ஏறும் விலை தான் இது. வெட்டியாக வண்டி எடுத்துக் கொண்டு சுற்றுவதை இங்கே விடலை மற்றும் சோம்பேறிகள் நிறுத்தியிருக்கானா ? ஈரானுக்கு பல்லாயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டு நாட்டின் பணத்தை கொள்ளை அடித்து உலகம் முழுதும் பதுக்கி விட்டு பெட்ரோல் விலையை ஏற்றாமல் இருப்பதாக நாடகம் ஆடினவங்க அவங்க. ஈரானுக்கு கொடுக்க வேண்டியதை பா .ஜ.அரசு வந்து தான் திருப்பிக் கொடுத்தது. அவிங்க பணம் வேண்டாம் என்று சொல்லியிருந்தா தம்பி சொல்ற மாதிரி அம்பது, அறுபது ரூபாய்க்கே கொடுக்கலாம். வருமான வரி கிர் என்று ஏறும். பரவாயில்லையா ? அப்போ அடிச்ச கொள்ளை போல இப்போ யார் அடிக்கறாங்க ?...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-நவ-202011:35:45 IST Report Abuse
Rasheel அப்போதான் அமைதி மார்க்கம் எல்லா இடத்திலும் குண்டு வைக்க வசதியாக இருக்கும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-நவ-202011:32:51 IST Report Abuse
Malick Raja அனைவரது சிந்தனைக்கும் ஒரு வேண்டுகோள் .. ஒன்றை மட்டுமாவது சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம் .. காங்கிரஸ் ஆட்சி செய்த போது குருடாயில் விலையோ 170 டாலர் என்று இருந்தபோது பெட்ரோல் வில்லை ரூ 67 ஆக உயர்ந்தபோது பிஜேபி கட்ட்சியினர் என்னவெல்லாம் சொன்னார்கள் இன்று ஒரு பீப்பாய் குருடாயில் வெறும் 40 டாலருக்கு விற்பனை யாகும்போது பெட்ரோல் ரூ 85 விற்கிறதே ஏன் . இப்போதாவது சொல்லுங்கள் யார் ஆட்சிசெய்ய தகுதியற்றவர்கள் என்று காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்கன் டாலர் ரூ 47 இன்று அமெரிக்கன் டாலர் ரூ 77 இப்போது சொல்லுங்கள் பிஜேபி ஆட்சி செய்ய அருகதை இல்லை என்பது தெளிவாகிவிட்டதாக ...
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
24-நவ-202012:34:09 IST Report Abuse
Shekarஅமெரிக்க டாலரை 68 ரூபாய்க்கு கொண்டுசென்ற பெருமை மௌன குருவையே சாரும், சுடலை மாதிரியே ரீல் விடவேண்டாம் . வண்டியோட்ட நல்ல ஹைவே ரோடு வேணும், நிற்காமல் போக பிளைஓவர் வேணும், அப்படினா பெட்ரோல் போடுறவன்கிட்டத்தான் வாங்கணும். மாட்டு வண்டி, குதிரை வண்டி வச்சுக்கோயேன் இந்த பிரச்சனையே இல்லை...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-நவ-202012:43:27 IST Report Abuse
Dr. Suriyaமதம் என்ற மஞ்சள் காமாலை நோய் வந்தவருக்கு இந்த அரசு செய்வது எல்லாம் மன்ஜளாகவே தெரியும் என்ன செய்வது நோயின் தாக்கம் அப்படி.......
Rate this:
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
24-நவ-202012:55:40 IST Report Abuse
வல்வில் ஓரி மதம் என்ற மஞ்சள் காமாலை நோய்::: இது இருப்பது 100 % பிஜேபி இடம் தான் சாத்தன் வேதம் ஒத்தூது...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-நவ-202015:25:05 IST Report Abuse
Dr. Suriyaஇவ்வளவு பேசுரியே.... ஏன் உந்தலைவனை ஒரு முஸ்லீம்க்கு முதல்வர் பதவி தருவோம்முன்னு சொல்ல சொல்லேன்..... கலாம் என்ற தலைவனை ஜனாதிபதி ஆக்கியது நீங்கள் சொல்லும் 100% சாத்தான். இரண்டாம் முறை கொண்டுவருவதை தடுத்தது சிறுபான்மை இந காவலன் என்று கூறிக்கொள்ளும் இந்த தில்லு முள்ளு கழகம் அதையும் நம்பும் இந்த சிறுபான்மை சகோதரர்கள் ...என்னத்த சொல்ல...
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
24-நவ-202021:45:10 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஏன் இருந்த ஒரு முஸ்லீம் அனுப்பிவிட்டு முஸ்லீம் உயர் பதவிக்கு உன்னுடைய பி சே பி கும்பல் செய்ய வேண்டியது தானே கேட்டல் உடனே கலாம் பெயரை சொல்ல வேண்டியது அவருக்கு அப்புறம் யாரை போட்டு விட்டிர்கள் ?...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
25-நவ-202012:15:44 IST Report Abuse
Dr. Suriyaஅதைக்கூட செய்யவில்லையே இந்த தில்லு முள்ளு கழகம் .....6 முறை முதல்வர் கட்டுமரம் ... ஒருதடவையாவது அடுத்த சமூகத்திற்கு விட்டு தந்துள்ளதா? கட்சி தலைவர் பதவி அது வாரிசுகளுக்குத்தான்... இப்போது அட்லீஸ்ட் ஒரு மாவட்ட செயலறு ஒரு முஸ்லிமுன்னு உங்களால காட்ட முடியுமா? பிஜேபி அதையம் செய்து விட்டார்கள் இதுவரை குடும்பமே கட்சி கட்சியே குடும்பமுன்னு இருக்கிற முஸ்லிமுக்காக ஒன்றுமே செய்யாத குடும்ப தி மு க வை கேள்வி கேட்டால்...என்னாம்மா வருது கோபம்.. மறுபடியும் அதையும் பிஜேபியே செய்யணுமா.. செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X