நவ., 24, 2005
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள, கலிங்கல் மேட்டுப்பட்டி எனும் ஊரில், 1944 மே, 15ம் தேதி பிறந்தவர் ராமசாமி. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர், தன் இலக்கிய நடவடிக்கைக்காக, அப்பணியை துறந்தார்; பின் மீண்டும், அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார்.தனித்தமிழ் இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கை ஆதரவாளராகவும் இருந்தவர், கம்யூ., பாதைக்கு மாறினார். இவரது கதை மற்றும் நாவல்கள் கன்னடம், மலையாளம், வங்காள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலராக பணியாற்றினார். அவரது நினைவாக, தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை நிறுவப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும், சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளருக்கு விருது
வழங்கப்படுகிறது. கடந்த, 2006 நவ., 24ம் தேதி, தன், 62வது வயதில் இயற்கை எய்தினார். எழுத்தாளர், தனுஷ்கோடி ராமசாமி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE