புதுடில்லி :'கொரோனா தடுப்பூசிகளில், எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்வு செய்ய உள்ளது' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவுக்கான தடுப்பூசி ஆராய்ச்சி பணியில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில், பெரும்பாலான நிறுவனங்களின் தடுப்பூசிகள், 90 சதவீத பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி விநியோகம் குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளுடன், பிரதமர் மோடி, சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளதாவது:பல்வேறு கொரோனா தடுப்பூசிகளில், எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும்.

யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி முதலில் கிடைக்கும். அதை மக்களிடம் விநியோகிக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது.மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க, 'பி.எம். கேர்ஸ்' நிதி பயன்படுத்தப்படுமா. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேர, எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE