ஊருக்கு ஊரு திறக்காறங்க 'பாரு...' ஆளுங்கட்சி நிர்வாகியால், பயங்கர 'பேஜாரு'

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | |
Advertisement
வீட்டுக்கு வந்த உறவினரை வழியனுப்ப, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றாள் சித்ரா. அங்கு மித்ராவும் வந்து சேர, உறவினரை அறிமுகம் செய்து வைத்தாள். நலம் விசாரிப்புக்கு பின், பஸ்சுக்காக காத்திருந்தனர்.''அனுமதியில்லாம, அக்கவுண்ட்ல பணத்தை எடுத்துட்டாங்க. இத சும்மா விடமாட்டேன்,'' என, சக ஊழியரிடம் குமுறி கொண்டிருந்தார் ஒரு கண்டக்டர்.''என்ன மித்து, எதாச்சும்
 ஊருக்கு ஊரு திறக்காறங்க 'பாரு...' ஆளுங்கட்சி நிர்வாகியால், பயங்கர 'பேஜாரு'

வீட்டுக்கு வந்த உறவினரை வழியனுப்ப, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றாள் சித்ரா. அங்கு மித்ராவும் வந்து சேர, உறவினரை அறிமுகம் செய்து வைத்தாள். நலம் விசாரிப்புக்கு பின், பஸ்சுக்காக காத்திருந்தனர்.

''அனுமதியில்லாம, அக்கவுண்ட்ல பணத்தை எடுத்துட்டாங்க. இத சும்மா விடமாட்டேன்,'' என, சக ஊழியரிடம் குமுறி கொண்டிருந்தார் ஒரு கண்டக்டர்.

''என்ன மித்து, எதாச்சும் பிரச்னையா?''

''ஆமாங்க்கா. தாராபுரம் டிப்போவில், வேல பாக்கற டிரைவர், கண்டக்டரோட பேங்க் அக்கவுன்ட்ல இருந்து, தொழிற்சங்க ஆண்டு சந்தான்னு சொல்லி, 500 ரூவா பிடிச்சுட்டாங்களாம். டென்ஷன் ஆன, டிரைவர், கண்டக்டர்ங்க, அக்கவுன்ட் செக் ஷனில் போய், 'எப்படி பணத்தை பிடிக்கலாம்னு' சண்டை போட்டிருக்காங்க...''

''தோழர், சங்கத்தோட வளர்ச்சிக்குதான் பணம். உங்களுக்காகத்தானே போராடறோம்னு' எவ்வளவோ சமாதானம் செஞ்சும், கேட்கலையாம். 'பணத்தை திருப்பி தந்தோ ஆகோணும்னு, டிரைவர், கண்டக்டர்ங்க கடுமையா சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''கோஷம் போடுறதுக்கு மட்டும்தான் சங்கம்னு ஆனதுக்கு அப்புறம் அவங்களும் என்னதான் செய்வாங்க…'' என சிரித்தாள் சித்ரா.

உறவினர் செல்ல வேண்டிய பஸ் வர, அவரை வழியனுப்பி விட்டு, இருவரும் கிளம்ப, பெருமாநல்லுார் செல்லும் பஸ் வந்தது.

அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, பெருமாநல்லுார் போலீஸ் லிமிட்டில, தீபாவளியன்னைக்கு சேவக்கட்டு நடந்ததாம். லட்சக்கணக்கில, பணம் புழங்கியிருக்கு. இதுக்கு ரூட் போட்டு கொடுத்ததே ஒரு போலீஸ்காரர் தானாம். அதேபோல, குன்னத்துார்ல, லாட்டரி விக்கிறவங்ககிட்ட இருந்து, மாசாமாசம் மாமூல் வாங்கிடுவாராம். லோக்கல் போலீஸ்காரங்கள விட, எல்லை கடந்தும், கல்லா கட்டுறதுல இவரு கில்லாடியாம்,'' என்றாள் சித்ரா.

''ஒரு ஏட்டுக்கு இத்தனை 'பவரா...'' என, ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.

''ஆமாண்டி... அவரோட அப்பா ஆளுங்கட்சில இருக்காராம். சில வருஷம் முன்னாடி, 'என் பையனுக்கு 'ைஹவே பேட்ரால்'ல வேலை போட்டுக் கொடுக்க ரெக்கமண்ட் பண்ணுங்கன்னு' நம்ம 'சபா'கிட்டயே மனு கொடுத்து, 'ைஹவே பேட்ரோல்ல' வேலை வாங்கி கொடுத்திருக்காருன்னா பார்த்துக்கோ. எங்க கலெக்ஷன் நல்லா கிடைக்குமோ, அங்க தான், அவரு வேலை செய்வாராம்,''

''அப்டின்னா... அவரோடு கல்லா கட்ற திறமைக்கு, இப்ப இருக்கற இடம் ஆகாது போல…'' என்ற, சித்ரா, ''இன்னும் உனக்கு புரியலைன்னா, பசுவை வித்து மாட்டிகிட்ட ஏட்டய்யான்னு சொன்னதான் தெரியுமா,'' என சிரித்தாள்.

''ஓ... அவரா?'' என மித்ரா சொன்னதும், ரோட்டில், 'ரங்கநாதர் துணை' என்ற பெயருடன் வேன், 'ஒன்வே'யில் வர, அங்கிருந்த போலீஸ்காரர் வாகனத்தை ஓரங்கட்டி சத்தம் போட்டார்.

''கலெக்ஷன் அடிபடும்னு, ஜூனியர்களை ஓரங்கட்டி வைக்கிறாங்களாம்'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுடி''

''அக்கா.... தாராபுரம் பக்கத்துல அலங்கியம் ஸ்டேஷன்ல, கலெக்ஷன் வர்ற கேஸ், கல்லா கட்ற விவகாரம் எல்லாத்தையும், சீனியர் போலீஸ்தான் டீல் பண்றாங்களாம். ஜூனியர்களை நெருங்க விடறது இல்லையாம்; அவங்களுக்கு எந்த வேலையும் சொல்லித்தர்றதும் இல்லையாம்,'' என்றாள் மித்ரா.

''சொல்லி குடுத்திட்டா வருமானம் போயிடுமே. இதேமாதிரி தான் மித்து. காங்கயத்துல, ஒரு ஆபீசரு, டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தும், இடத்த காலி பண்ணாம இருக்காராம். தீபாவளி கலெக்ஷன் முடியலைன்னு ஒரு பேச்சு அடிபடுது,''வண்டியை ஓரங்கட்டிய சித்ரா, 'ரவிக்குமார் பேன்ஸி' என்ற பெயருள்ள கடைக்குள் நுழைந்து, பொருட்களை வாங்கினாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''கோழிப்பண்ணை ஊர்ல, கரடிவாவியில், நம் நாட்டின் பெயர் வைத்துள்ள ரெஸ்டாரண்ட்ல, 24 மணி நேரமும், 'சரக்கு' புல் சப்ளையாம். அதோட 'பார்' வேற இருக்காம். லோக்கல், அப்புறம் ரகசிய போலீஸ்ன்னு எல்லாரையும் 'கவனிச்சுட்டு'த்தான் தொழில் பண்றோம். எங்கள யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு வெளிப்படையாவே சொல்றாங்களாம்,'' என்றாள்.

''இப்படி லஞ்சம் வாங்கி வாங்கித்தான், நாடு குட்டிச்சுவரா போயிட்டிருக்கு, ''ஆவேசப்பட்ட மித்ரா, ''அக்கா.. வெட்டின மரத்தை புதைச்ச கதை சொல்றேன், கேளுங்க...!'' என்றாள்.

''அப்படியா… சொல்லுடி''

''பருவாய்க்கு பக்கத்தில, ரியல் எஸ்டேட் அமைக்க பர்மிஷன் இல்லாம மரத்த வெட்டிட்டாங்க. இது அதிகாரிகளுக்கு தெரிஞ்சு, அடுத்த நாள் போய் விசாரிக்கலாம்னு இருந்தாங்க. ஆனா, தகவல் தெரிஞ்சுகிட்ட அந்நபர், வெட்டின மரத்த ராத்திரியோட ராத்திரியா குழி தோண்டி புதைச்சுட்டாங்க,''

''அப்படி ஒரு மரமே அங்க இல்லைன்னு சொல்ற அளவுக்கு, கிராம அதிகாரியையும் 'கவனிச்சு' சரிகட்டிட்டாங்க…''

''அட…கோவிந்தா!'' என்ற சித்ரா, ''இப்பல்லாம், எல்லா தப்பையும் சரியா செஞ்சு, ஈஸியா மறைச்சிடறாங்க,'' என்றவள், ''ஆளுங்கட்சியில கோஷ்டி சத்தம் அதிகமா கேட்கிறதால, பொள்ளாச்சிகாரரை, 'டாலர் சிட்டிக்கு' நியமிச்சிட்டாங்க,''

''அவர் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில, கோஷ்டி அரசியல் பண்ற வி.ஐ.பி.,க்களும் கலந்துகிட்டாங்க. அவங்களோட கைகோர்த்து 'குரூப் போட்டோ' எடுத்துக்கிட்டு, கோஷ்டிகளை 'கப்...சிப்'னு அடக்கிட்டாராம்,'

''அரசியல்ல இதெல்லாம், சாதாரணம்டி,'' சிரித்த சித்ரா, ''மாஜி நிர்வாகி மேல, சகட்டுமேனிக்கு கம்ப்ளைன்ட் வருதாம்டி,'' என்றாள்.

''எந்த விவகாரத்தில்...''

''வேறெதில, ஊருக்கு ஊரு 'டாஸ்மாக்' மதுக்கடை திறங்கன்னு, இடத்த புடிச்சு கொடுத்து ஆபீசருக்கு ஐடியா குடுக்கறாராம். இப்படித்தான், வஞ்சிபாைளயத்தில கடையை திறக்க ரெடி பண்ணிட்டாங்க. மக்களுக்கு தெரிஞ்சு போர்க்கொடி துாக்கிட்டாங்க...''

''ஏன், அவரு இப்படி பண்றாரு?''

''ஆமாண்டி, ஆனந்தமா இருந்த அவருக்கு முக்கியமான பதவியும் போச்சு. அதனால, கெடைக்கிற வரைக்கும் லாபம் பாக்காலம்னு, இப்ப கடை திறக்கறதில் மும்முரமா இருக்கிறாரு. அதனால, அவரை பத்தி புதுசா வந்திருக்கற நிர்வாகிகிட்டயும், முதல்வர் கிட்டயும் புகார் மனு பறக்குதாம்,'' விளக்கினாள் சித்ரா.

''எலக் ஷன் நேரத்தில், இதுபோன்ற வேலைகளை யார் செஞ்சாலும், அது ஆளுங்கட்சிக்கு எதிரான முடிஞ்சிடும்னு அவருக்கு தெரியாதா?,''

''ம்... தெரியாம என்ன, பல லட்சக்கணக்கில காசு பார்த்தவரு, பணத்தாசை விட்டு வைக்குமா என்ன?'' சொன்ன சித்ரா, ''கடத்தல் விவகாரத்துல சிக்கின வி.ஐ.பி.,யோட அசிஸ்டென்ட்ட ஓரங்கட்டி வைச்சுட்டாங்க மித்து,'' என உடுமலை மேட்டருக்கு தாவினாள்.

''ஏன்... என்னாச்சுங்க்கா?''

''அட, அவரு மேல 'கலெக்ஷன்' கம்ப்ளைன்ட் அதிகமாகிட்டதால, எலக்ஷன் சமயத்துல பேரை கெடுத்துக்க கூடாதுன்னுதான், ஒதுக்கி வச்சுட்டாங்களாம்,'' சொன்ன சித்ரா,

''நாளைக்கு, வடக்கு தாலுகா ஆபீஸ் வரைக்கும் போகணும். சின்ன வேலை இருக்கு,'' என்றாள்.

''அக்கா…அங்க, முக்கியமான ஆபீசரு, லாங்லீவுல இருக்காராம். இதனால, மத்த ஊழியர்களும், ஓ.பி., அடிக்கிறாங்களாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய, புரோக்கர்கள் காட்டில், 'நிவார்' புயலாட்டம் 'பண' மழை பெய்யுதாம். எந்தவொரு டாக்குமென்ட் வேணும்னாலும், காசு குடுத்தா தான் வேல நடக்குதாம். ஜாக்கிரதையா இருங்க,'' என்றாள் மித்ரா.

சிக்னலில் சித்ரா வண்டியை நிறுத்த, அருகில் பைக்கில் வந்த ஒருவர், 'ஏம்பா…பாபு, சரியா வேலைக்கு வர மாட்டேங்கற; கடைக்கு நிறைய கஸ்டமர் வர்றாங்க. சட்டுன்னு வா...' என மொபைல் போனில் சத்தமாக பேசினார். அதற்குள், பச்சை விளக்கு எரியவே, வண்டி புறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X