பொது செய்தி

தமிழ்நாடு

கவிதாவால் மருத்துவம் பார்க்க போகும் கவி: திருநங்கைக்கு மதுரை போலீஸ் தந்த கவுரவம்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை மருத்துவம் படித்த திருநங்கைக்கு, மதுரை பெண் இன்ஸ்பெக்டர் உதவியால், மருத்துவப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.மதுரை, திலகர்திடல் இன்ஸ்பெக்டர் கவிதா, சில நாட்களுக்கு முன், மதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்கு ரோந்து சென்றபோது, சில திருநங்கையர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ஒருவர் மட்டும் தன்னை, எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர் என்றார்.இதை நம்பாத
 கவிதா, மருத்துவம்,  கவி, திருநங்கை,  மதுரை போலீஸ்,  கவுரவம்

மதுரை மருத்துவம் படித்த திருநங்கைக்கு, மதுரை பெண் இன்ஸ்பெக்டர்
உதவியால், மருத்துவப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.மதுரை, திலகர்திடல் இன்ஸ்பெக்டர் கவிதா, சில நாட்களுக்கு முன், மதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்கு ரோந்து சென்றபோது, சில திருநங்கையர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ஒருவர் மட்டும் தன்னை, எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர் என்றார்.

இதை நம்பாத இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்கு அழைத்து, மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, உண்மை எனத் தெரிந்தது. தேனியைச் சேர்ந்த கவி, 23, என்ற அந்த திருநங்கையின் இயற்பெயர் மகேஸ்வரன். சில ஆண்டுகளுக்கு முன், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பை, 67 சதவீத தேர்ச்சியுடன் முடித்தார்.

ஆனால், திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக, எந்த மருத்துவமனையும் இவரை பணியில்
சேர்த்துக் கொள்ளவில்லை. பலரிடம் வேலை கேட்டும் பலனில்லாததால், சக திருநங்கையருடன் சுற்ற ஆரம்பித்தார். இச்சூழலில்தான் போலீசாரின் பார்வையில் பட்டார்.திருநங்கை என்பதற்கான சான்றிதழ் இல்லாததால், தனியாக கிளினிக் வைக்க முடியவில்லை என ஆதங்கப்பட்ட கவிக்கு, லேப் டெக்னீஷியன் ஒருவர், கிளினிக் வைக்க ஏற்பாடு செய்வதாக
உறுதியளித்தார்.

அதேபோல், திருப்பரங்குன்றம் மருத்துவமனை ஒன்றில், கவியை பணியில் சேர்க்க, இன்ஸ்பெக்டர் கவிதா ஏற்பாடு செய்தார்.தவிர, கவிக்கு வெள்ளை நிற அங்கி, ஸ்டெதஸ்கோப் வாங்கிக் கொடுத்தும் கவுரவித்தார். போலீசார் என்றாலே இப்படித்தான் என்ற பெரும்பாலானோரின் மனநிலையை மாற்ற முயற்சிக்கும் கவிதா போன்ற போலீஸ் அதிகாரிகளால், ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் பெருமை. அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அடிப்போம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202023:53:33 IST Report Abuse
அர்ஜுன் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
24-நவ-202022:10:11 IST Report Abuse
naadodi வணக்கம் வாழ்த்துக்கள் நற்செய்தியைப் பகிர்ந்த தினமலருக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X