பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்: சத்குரு

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோவை : 'மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும்' என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு மருந்தை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன.
Sadhguru, Isha Foundation, BTS2020, Isha Yoga, சத்குரு, ஈஷா

கோவை : 'மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும்' என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'பெங்களூரு டெக் சம்மிட் 2020' என்ற தொழில்நுட்ப மாநாடு ஆன்லைன் வாயிலாக சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்புரை ஆற்றிய சத்குரு கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேசியதாவது:


latest tamil news



கொரோனா தடுப்பு மருந்தை பெற்று கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன். தங்கள் உயிரை பணயம் வைத்து களப் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் போலீசாருக்கு கொரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்க வேண்டும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்து நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதில் ஊழல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கு பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் விதமாக தடுப்பு மருந்துக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும். இவ்வாறு சத்குரு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh J - Madurai,இந்தியா
28-நவ-202011:59:14 IST Report Abuse
Venkatesh J அருமை
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-நவ-202015:49:24 IST Report Abuse
Endrum Indian நானும் அப்படித்தான் எண்ணுகின்றேன்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-202014:34:41 IST Report Abuse
தமிழவேல் நானும் அப்புடிதான், முதலில் பிரதமர், முதல்வர்கள், மந்திரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், MLA , MP க்கள் என எல்லா அரசியல்வாதிகளும் போட்டுக்கட்டும். அப்புறமா, ஒருமாதம் பின்னால, பார்த்துகிட்டு இவரு சொல்றாப்போல செய்யலாம். வேணும்னா, இவருக்கு முன்னால நானும் போட்டுக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X