பொது செய்தி

இந்தியா

தவறாக பிரசாரம் செய்ய சதி: ஜே.என்.யு., மாணவர் திட்டம் அம்பலம்

Updated : நவ 25, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில், சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாக, உலக அளவில் தவறாக பிரசாரம் செய்யும் நோக்கத்தில், அதிபர் டிரம்ப் வருகையின்போது, டில்லியில் வன்முறைகளை அரங்கேற்ற ஜே.என்.யு., மாணவர் காலித் திட்டமிட்டது,தெரியவந்துள்ளது.குற்றப்பத்திரிகை டில்லியில், , மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடந்த பிப்ரவரி, 24ம் தேதி
jnu, Umarkhalid, ஜேஎன்யு, மாணவர், சதி

புதுடில்லி : இந்தியாவில், சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாக, உலக அளவில் தவறாக பிரசாரம் செய்யும் நோக்கத்தில், அதிபர் டிரம்ப் வருகையின்போது, டில்லியில் வன்முறைகளை அரங்கேற்ற ஜே.என்.யு., மாணவர் காலித் திட்டமிட்டது,தெரியவந்துள்ளது.


குற்றப்பத்திரிகை


டில்லியில், , மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடந்த பிப்ரவரி, 24ம் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறைகள் வெடித்தன. அதில், 53 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய, 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவிற்கு வந்திருந்ததால், அந்த வன்முறை சம்பவம், உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வன்முறை குறித்து விசாரித்து வரும் டில்லி போலீசார், கடந்த செப்டம்பர் மாதம், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதே மாதம், இதில் தொடர்புடைய, ஜே.என்.யு., எனப்படும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான உமர் காலித், கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டில்லி போலீசார், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத்திடம், நேற்று முன்தினம், துணை குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். அதில், காலித் உட்பட பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: டில்லியில் நடந்த வன்முறைகளுக்கு, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், பைசான் கான் உள்ளிட்டோர், முக்கிய காரணமாக இருந்தனர். இதர குற்றவாளிகளுடன் சேர்ந்து, சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில், காலித், முன்கூட்டியே சதித் திட்டங்களை தீட்டியது தெரியவந்து உள்ளது.


வன்முறை


இந்தியாவில், சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாக, உலக அளவில் தவறாக பிரசாரம் செய்யும் நோக்கத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது, அந்த வன்முறைகள்அரங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


போலீஸ் மனு தள்ளுபடி


டில்லியில் நடந்த வன்முறைகளில் தொடர்புடைய ஜாமியா பல்கலை மாணவருக்கு, போலி அடையாள அட்டையை வைத்து, சிம் கார்டு வழங்கிய பைசன் கான் என்பவர், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். எனினும், டில்லி உயர் நீதிமன்றம், அவருக்கு, கடந்த மாதம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், டில்லி போலீசார் முறையிட்டனர்.இந்நிலையில், இந்த குற்றச்சாட்டில், பைசன் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் இல்லையென கூறி, இந்த மனுவை, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-202023:03:48 IST Report Abuse
Rajan சூசை நம்ம வக்கீல்ஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க?
Rate this:
Cancel
Afro - Vellore,இந்தியா
24-நவ-202018:31:33 IST Report Abuse
Afro கபில் மிஸ்ரா போலிஸ் வைத்துகொண்டு பேசியது காரணம்இல்லையா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-நவ-202017:30:06 IST Report Abuse
sankaseshan அவசர சட்டம் கொண்டுவந்து JNU வை இழுத்து Moodavum தேசவிரோதிகளின் புகலிடமாக உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X